Monday, March 16, 2009

காலங்களைக்கடந்த அமரகாவியக்காதல்



அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்கள் கண்களில்கடந்த மாதம் அகப்பட்ட விடயம் பேராச்சரியத்தைக் தந்துள்ளது.
இத்தாலியின் வடபகுதி நகரான மன்டோவாவில் அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருந்த புதைபொருளியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டகாட்சி மனதுமறக்காதது.
ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்ட நிலையில் இருவரது எலும்புக் கூடுகளையே அவர்கள் கண்டனர்.
இதன்காலம் Neolithic எனப்படும் 5000முதல் 6000 ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தமது 25 வருடகால அகழ்வாராய்ச்சி வாழ்க்கையில் இது ஒர் அசாதாரணமான கண்டுபிடிப்பு எனக்கூறிய எலேனா மெனொட்டி, இதைக்கண்ணுற்ற போது தமது உள்ளம் உருகியதாக கூறியுள்ளார்.

கட்டியணைத்த நிலையிலுள்ள இந்த எலும்புக்கூடுகள் இளமையானவர்களுடைய தெனவும் அவர்கள் காதலர்களாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது பற்கள் அப்படியே சிதைவடையாது இருப்பதே இதற்கு காரணம் என சுட்டிகாட்டப்படுகின்றது.
இறக்கும் போது இந்த தம்பதியரின் வயது என்ன என்பதையும் எப்படி இருந்தார்கள் என்பதையும் கண்டறிய இந்த எலம்புக்கூடுகள் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கபட்டுள்ளன. ஏன்னவென்றாலும் காலங்களை வென்ற காதல் இதுவல்லோ.

No comments:

Post a Comment