Monday, March 16, 2009

நெருக்கடியிலும் சவால்களுக்கு மத்தியில் செயற்படும் ஊடகவியலாளர்களே இலங்கைக்கு நம்பிக்கைதருகின்றனர்

வொரன் கிறிஸ்டோபர் - முன்னாள் தலைவர்
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம்
பேட்டிகண்டவர் ஆ. அருண்



பாதுகாப்பான பல்லினத்தன்மைகொண்ட மனித உரிமைககளில் அக்கறைகொண்ட இலங்கை நாட்டை உருவாக்குவதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகமுக்கியம்
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் வொரன் கிறிஸ்டோபர் தெரிவித்தார்

அண்மையில் இலங்கைக்கு விஜயம்மேற்கொண்டிருந்த இவர் கேசரிக்கு அளித்த விசேட நேர்காணலின் போதே இதனைத்தெரிவித்தார்

1998 ஆண்டுமுதல் 2007 ஆண்டுவரை சர்வதேச ஊடகவியாளர் சம்மேளனத்தின் தலைவராக கடமையாற்றிய வொரன் கிறிஸ்டோபர் தற்போது அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் மனித உரிமைகளை அறிக்கையிடுதல் தொடர்பான செயலமர்வில் சிறப்பு வளவாளராக பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த வொரன் அளித்த நேர்காணல்



கேள்வி: இலங்கைக்கு பலமுறைவிஜயம் செய்துள்ளவர் என்ற வகையில் முன்னைய விஜயங்களை விடஇம்முறை விஜயத்தின் போது உங்கள் அவதானிப்புக்கள் யாவை ?

பதில்:
கடந்த 12மாதகாலப்பகுதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறிப்பிடத்தக்களவிற்கு மோசடைந்துள்ளமை தெளிவாக விளங்குகின்றது ஊடகத்துறையில் பணிபுரிபவர்களைப்பொறுத்தவரையில் இந்த நிலைமை மிகமிக அபாயகரமாகக்காணப்படுகின்றது தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் அதிகமாக கடத்தப்பட்டமை அன்றேல் கடத்தலுக்கான எத்தனிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டமை துரதிஷ்டவசமாக படுகொலைகள் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன இது இரண்டுவருடகாலப்பகுதிக்கு முன்பாகவும் 12மாதகாலப்பகுதிக்கு முன்பாக இருந்தநிலையிலும் பார்க்கையில் நிலைமை மோசமடைந்துள்ளதை நிச்சயமாகக்கூறமுடியும்

கேள்வி: இலங்கையில் மனித உரிமை சார்ந்த விடயங்களை அறிக்கையிடுதல் தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்
மனித உரிமைகளுக்கான போராட்டமானது இலங்கையின் வரலாற்றை எடுத்து நோக்குகையில் நடுநாயகமாக விளங்கிவந்துள்ளது என நான் நினைக்கின்றேன் 1948ல் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட காலப்பகுதி முதலாக இது இருந்து வந்திருக்கின்றது தற்போதைய நிலையில் மனித உரிமைகள் தொடர்பாக தமது பொறுப்புணர்வை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதே ஊடகங்களுக்கு முன்பாக உள்ள சவாலாகும் அனைத்துசுதந்திரக்களுக்கும் மையமாக திகழ்கின்ற கருத்துவெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல அனைத்துமக்களதும் உரிமைகள் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் பெண்களின் உரிமைகள் இடம்பெயர்ந்துள்ள மக்களின் உரிமைகள் யுத்தத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் இந்த விடயங்கள் தொடர்பாக அறிக்கையிடுவது ஊடகங்களின் பொறுப்பாகும் ஏனெனில் இதுவே இலங்கை மக்களுக்கு தற்போதைய நிலையில் உண்மையாக அவசியமானதாகும்

கேள்வி : சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் என்ற வகையில் இலங்கைபோன்ற பல நாடுகளின் அனுபவங்களைநீங்கள் பெற்றிருக்க வாய்ப்புண்டு ஏனையநாடுகளுடன் ஒப்புநோக்குகையில் இலங்கையின் நிலை எவ்வாறுள்ளது ? அந்தநாடுகளில் இருந்து பெற்ற படிப்பினைகள் இலங்கைக்கு எங்கனம் துணைபுரியும் என எண்ணுகின்றீர்கள் ?
பதில்
இலங்கை எப்போதுமே ஒரு முரண்பாட்டு தன்மைகளைத்தாங்கிய நாடாகவே இருந்துவந்துள்ளது இலங்கையில் மனித உரிமைகள் அதிகமான அழுத்தத்திற்குட்படுகின்ற அதே வேளை பல்வேறு அழுத்தங்களுக்கும் சக்திகளுக்கும் மத்தியில் ஜனநாயகம் தொடர்ந்தம் முன்சென்று கொண்டிருக்கின்றது குறித்த அளவிற்கேனும் சுயாதீனமான நீதித்துறை இங்கு காணப்படுகின்றது அத்தோடு சில வரையறைக்குள் சுதந்திர ஊடகமும் இருந்துவந்துள்ளது இலங்கைச்சமூகத்தை எடுத்துநோக்கினால் எப்போதுமே முரண்பாடான நிலை இருந்துவந்துள்ளது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற திறந்த பன்மைத்துவம் கொண்டதும் பல்லினத்தன்மைகொண்டதுமான ஜனநாயகத்தை கொண்டநாடாக இலங்கை வளர்ச்சிகாண்பபே எமக்குமுன்பாகவுள்ள பிரதான சவாலாக விளங்குகின்றது எவ்வாறு அப்படியான ஜனநாயக நாடாக மாறுவதென்பது எப்போதுமே போராட்டமாக இருந்து வருகின்றது உலகின்நாலாபாகங்களையும் உற்றுநோக்குமிடத்து நாடுகள் ஒருவழியில் அன்றேல் எதிர்வழியில் செல்வதற்கு எத்தனிப்பதைக்காணமுடியும் கடந்த 20வருடகாலப்பகுதியில் மனித உரிமைகள் மட்டில் அதிக மதிப்புணர்வு அதிகரித்த ஜனநாயகம் நோக்கிய போக்கு இருந்துவந்துள்ளதைக்காணமுடியும் கடந்த ஐந்து அன்றேல் ஆறு ஆண்டுகாலப்பகுதியில் இந்த நிலையில் இருந்து சற்றே பின்னோக்கிச்செல்லும் நிலையை எம்மால் காணமுடியும் இலங்கை ஏறத்தாழ அந்த நிலையை பிரதிபலிப்பதாகவே இருந்துள்ளதைக்கண்டுணரமுடியும் இருபது வருடங்களுக்கு முன்னர் இங்கு காணப்பட்ட மனித உரிமைகள் நிலைமை இதுவரைகாலத்தை இங்கிருந்த மிகமோசமான நிலைமையாகும் உலகளவிலும் மிகமோசமானவற்றில் லொன்றாகவே அன்றைய நிலைமை காணப்பட்டது பின்னர் வந்த 15வருட காலப்பகுதியில் அந்தநிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதை உணர்ந்துகொள்ளமுடிந்தது மனித உரிமைகளை மதித்துநடக்கின்ற விடயத்தில் தற்போது நாம் கணிசமான அளவிற்கு கவலையளிக்கின்றதான போக்கையே காண முடிகின்றது உலக நாடுகளின் படிப்பினைகள் எமக்கு எதை இந்தவிடயத்தில் உணர்த்தி நிற்கின்றதென்றால் இந்த விடயங்கள் தொடர்பாக அக்கறை கொண்டுள்ள இலங்கை மக்கள் குறிப்பாக ஊடகங்கள் மனித உரிமைகளுக்காக எழுந்துநின்று குரல்கொடுப்பதுடன் அவற்றை அறிக்கையிடுகின்ற பொறுப்பும் உள்ளது அதன்மூலமாகவே தற்போதைய நிலையிலிருந்து விடுபடமுடியும்


கேள்வி :இலங்கையில் ஊடகவியலாளர்கள் தமது தொழிலிருந்து வெளியேறவேண்டிய அன்றேல் அதனை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது குறிப்பாக வடபகுதியில் இந்த நிலைமை மோசமடைந்தள்ளது இதனை மேம்படுத்துவதற்கு ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நாம் என்ன செய்யமுடியும் ?

பதில்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒட்டுமொத்த சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் பாதுகாப்புச்சூழ்நிலை மிகமோசமாக காணப்படுகின்றமையால் பல ஊடகவியலாளர் இந்த தொழிலைக்கைவிட்டுச்செல்கின்றனர் பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் மேலும் பலர் வேறு தொழில்களை நாடிச்செல்கின்றனர் ஆனாபோதிலும் பலர் தொடர்ந்தும் தமது தொழில் ஈடுபட்டுவருகின்றனர் பலர் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் எமது தொழில் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர் அதுதான் இலங்கைக்கு நம்பிக்கையைக்கொடுக்கின்ற விடயம் என நான் நினைக்கின்றேன் இந்த சூழ்நிலையிலும் என்ன நடைபெறுகின்றதென்பதை அறிக்கையிடுகின்ற ஊடகவியலாளர்கள் இருப்பது நம்பிக்கைதருகின்றவிடயமாகும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர்களுக்கு என்ன நடைபெறுகின்றதென்பதை அறிக்கையிடுவது முக்கியமானதாகும் ஏனெனில'; பாதுகாப்பான பல்லினத்தன்மைகொண்ட மனித உரிமைககளில் அக்கறைகொண்ட இலங்கை நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனநாயகத்தை அதுவே இறுதியில் உத்தரவாதப்படுத்துகின்ற முக்கிய விடயமாகும்

கேள்வி :மனித உரிமைகள் ஊடகசுதந்திரம் போன்றவிடயங்களை மேற்கத்தைய நாடுகளளும் அமைப்புக்களும் வளர்முக நாடுகளை அடக்கியாள்வதற்கான ஆயுதங்களாக பாவிப்பதாக அரசாங்கத்தரப்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உங்களது பதில் என்ன ?


பதில் :

நாம் பூகோளமயமாக்கப்பட்டுள்ள உலகில் வாழ்கின்றோம் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும் என நான் நினைக்கின்றேன் மனித உரிமைகள் என்பது பிரபஞ்ச ரீதியில் தவிர்க்கப்படமுடியாத விடயமாகும் அந்தவகையில் அரசாங்கமானது தனித்து இயங்கமுடியாது அரசாங்கமானது ஏனைய நாடுகளினதும் அமைப்புக்களினதும் அபிப்பிராயங்கள் கரிசனப்பார்வைகள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டியது அவசியமாகும் இந்தவிடயத்தை புரிந்துகொள்வதில் அரசாங்கம் தவறியுள்ளது என நான் கருதுகின்றேன் பூகோளமயமாக்கல் என்பது நாடுகளுக்கு வரையறையற்ற வாய்ப்புக்களை வழங்குகின்ற அதேவேளை சில கட்டுப்பாடுகளையும் ஒழுக்கங்களையும் விதித்துள்ளது நாடென்பது அதன் சொந்த நாட்டுப்பிரஜைகளின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியது அவசியமானதாகும் என்பது அவ்வாறாக எதிர்பார்க்கப்படும் ஒழுக்கங்களிலொன்றாகும் இலங்கையில் வாழ்கின்ற மக்களின் மனித உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமாகும் தமது சொந்த நாட்டுமக்கள் தொடர்பாக உள்ள பொறுப்புக்களை நிறைவேற்றத்தவறியுள்ளமைகாரணமாகவே என்போன்றோரும் ஏனையவர்களும் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் குறிப்பாக ஊடகவியலாளர்களின் உரிமைகளைப்பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டுள்ளது அந்தவகையில் இயலுமான ஊடகவியலாளர்கள் இலங்கையில் மனித உரிமைகளைப்பாதுகாக்கின்றதும் ஊக்குவிக்கின்றதுமான விடயத்தில் தமது பங்களிப்பை ஆற்றுவது முக்கியமானதாகும் .

கேள்வி இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் யுத்தச்சூழ்நிலை முக்கிய காரணியாக கூறப்படுகின்றது ஆனாலும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் அன்றேல் பிரசாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன மாற்றத்தை கொண்டுவரவேண்டிய பெரும்பான்மையான மக்களே யுத்தத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்றதாக n;தரிவிக்கப்படும்போது இலங்கையில் மாற்றத்தை யாரால் ஏற்படுத்தமுடியும் ?


பதில் : சுதந்திர ஜனநாயக இலங்கை நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு உரித்துடைமை உள்ளது என்பதே அரசாங்கத்தின் வாதமாகும் ஆனால் அதே இலங்கைவாழ்மக்களின் மனித உரிமைகளை நசுக்குவதன் மூலமாக சுதந்திர ஜனநாயக இலங்கை நாட்டை பாதுகாக்க முடியாது இலங்கை சமூகங்களின் மத்தியில் வலுவான
ஜனநாயகமும் வலுவான மனித உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டு நடைமுறை வடிவம் பெற்றால் மட்டுமே யுத்தத்தில் வெற்றிபெற்றாலும் அதில் அர்த்தம் இருக்க முடியும் யுத்தத்தை நடத்திக்கொண்டு இலங்கைவாழ்மக்களின் மனித உரிமைகளைப்பாதுகாக்கின்ற விடயங்கள் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல இலங்கையர்கள் அனைவரதும் மனித உரிமைகள் மதித்துச்செயற்படுவதன் வாயிலாகவே இந்த யுத்தத்தை இராணுவரீதியாக மட்டுமன்றி கலாசார ரீதியாகவும் அரசியல் ர்Pதியாகவும் சமூகரீதியாகவும் வென்றெடுக்கமுடியும் எல்லாவற்றுக்கும் மனித உரிமைகளை மதித்துச்செயற்படுவது அவசியமாகும் .

கேள்வி: நீங்கள் பல்வேறுநாடுகளின் ஊடகத்துறைகளையும் பார்த்திருப்பீர்கள் இலங்கையின் ஊடகத்துறையின் ஒட்டுமொத்த தராதரத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில் :இந்த விடயத்தில் நாம் நேர்மையாக பேசியாகவேண்டும் என்று நினைக்கின்றேன் இலங்கையிலுள்ள அதிகமான ஊடகவியலாளர்கள் தமது இனத்தைச்சார்ந்த உணர்வுகளால் உந்தப்பட்டு அதன்போக்கில் இழுத்துச்செல்ல தம்மை அனுமதிக்கின்றார்கள் என நான் கருதுகின்றேன் யுத்தத்தைப்பொறுத்தமட்டில் தமது பக்கத்தின் காரணங்களை வெளிப்படுத்துவதற்கான பிரதான பிரசார வழித்தலைவர்களாக அவர்கள் விளங்குகின்றனர் உண்மையில் அது ஊட்கவியலாளர்களின் பணியல்ல மாறாக நடைபெறுகின்ற சம்பவங்களைப்பதிவுசெய்து அறிக்கையிடுவதே ஊடகவியலாளர்களாகிய எமது பணியாகும் ஆனாலும் இலங்கை ஊடகத்துறையிலுள்ள இன்னும் பலர் என்ன நடைபெறுகின்றதென்பதை அறிக்கையிட முயற்சிக்கின்றனர் இது இலங்கை ஊடகத்துறையை வாழவைத்துக்கொண்டிருக்கின்ற விடயமாகும் யுத்தத்தின் பாதிப்புக்கள் சமூகங்களின் மத்தியில் தாக்கம் பொருளாதாரரீதியான தாக்கம் போன்ற விடயங்களை அறிக்கையிட பலர் ஊடகவியலாளர்கள் இலங்கையில் முயன்று கொண்டிருக்கின்றனர் இது இலங்கை ஊடகத்துறைக்கு சேரவேண்டிய கௌரவமாகும் இந்த மிகமோசமான சூழ்நிலைக்குமத்தியிலும் தொடர்;ந்தும் தமது பணியை ஆற்றுவதன் மூலமாக என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவ+ட்டுகின்ற மகத்தான பணியைச்செய்துகொண்டிருக்கின்றனர்

கேள்வி ஊடகங்களின் மீதான அழுத்தங்கள் தணிக்கைகள் போன்றவை தற்கால கட்டத்தில் அவை ஏற்படுத்தப்பட்ட நோக்கங்களை அடையத்தவறிவிடுகின்றன என்று கூறப்படுவது பற்றி ?

பதில்
பாரம்பரிய ரீதியாக ஊடகங்களை கட்டுப்படுத்துகின்ற விடயம் இனிமேலும் பலனளிக்கப்போவதில்லை என்பதே தற்போதைய நிலையில்
அரசாங்கமும் இராணுவமும் முகங்கொடுக்கின்ற சவாலாகும் அரசாங்கத்திற்கு சொந்தமான ஊடகங்கள் மீதான கடுமையான அரசியல் கட்டுப்பாடுகள் விளம்பரதாரர்கள் மீதான அழுத்தங்கள் சுயாதீன ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் சுயாதீன ஊடகவியலாளர்கள் மீது வன்முறைகளை ஏவிவிடுதல் போன்ற பாரம்பரிய கட்டுப்பாட்டு முறைமைகள் இந்தக்காலகட்டத்திற்கு பயனற்றது அவை இனிமேலும் பலனளிக்க மாட்டாது ஊடகங்கள் ஒருகாலகட்டத்தில் இருந்ததை விடவும் தற்போது மிகவும் பரந்துபட்டதும் பல்வகைத்தன்மைகொண்டதுமாகதிகழ்கின்றது செய்திகளையும் தகவல்களையும் தெரிந்துகொள்ளுவதற்கான மக்களின் ஆற்றல் முன்னரைவிடவும் தற்போது விசாலமானதாகும் துரதிஷ்டவசமாக இந்த நடைமுறை உண்மைகளிலிருந்து பாடங்களைக்கற்றுக்கொள்வதற்கு பதிலாக பாரம்பரிய கட்டுப்பாட்டு உபாயங்களை ஆக்ரோசமானமுறையில் கடுமையாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது அரசாங்கம் அதன் அணுகுமுறையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் அடிப்படையில் இணங்கிய கொள்கைகளான மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இலங்கையர் அனைவரதும் உரிமைகளை மதித்துநடத்தல் ஆகியவற்றுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துச்செயற்படவேண்டும்



கேள்வி இலங்கையில் ஊடகத்துறைக்குள் பிரவேசிப்பவர்களுக்கென தராதரங்கள் ஏதும் இல்லை இதனால் தான் ஊடகவியலாளர்கள் தமது உணர்வுகளின் போக்குக்கு இழுத்துச்செல்லப்படுகின்றனர் என்று கருத்துக்கள் உண்டு .உண்மையில் ஊடகவியாளர்கள் எவ்வாறாக தாம் தேர்ந்ததுறையில் தம்மை வளப்படுத்திக்கொள்ளவேண்டும் ?


பதில்

ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கற்றல்நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் மீண்டும் மீண்டும் தம்மை பயிற்றுவித்துக்கொள்வதற்கும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் தமது தொழிலை மேற்கொள்வதற்கு தெரிந்தகொண்டுள்ள விடயங்களின் அளவு அறிவு போதாது என்பதை ஊடகவியலாளர்கள் ஒப்புக்கொண்டேயாகவேண்டும் ஏனென்றால் யாருமே முற்றாக தெரிந்த மனிதர்கள் கிடையாது ஊடகவியலாளர்கள் வெறுமனே எழுத்தெரி;ந்திருந்தால் மட்டும் அன்றேல் தொலைக்காட்சி செய்தியாள்கை தெரிந்திருந்தால்; மட்டும் அன்றேல் வானொலி செய்தியாள்கை தெரிந்திருந்தால் மட்டும் தற்போதைய நவீன ஊடகதுறையில் போதாது இந்த விடயங்கள் யாவற்றையும் செய்யக்கூடியவர்களாக ஊடகவியாளர்கள் இருக்க வேண்டும் பல்துறைசார்ந்த பரந்த அறிவைக்கொண்டவர்களாக ஊடகவியலாளர்கள் இருக்கவேண்டும் தாம் சார்ந்த சமூகம் உலகம் தொடர்பான பரந்த புரிந்துணர்வைக்கொண்டவர்களாக ஊடகவியலாளர்கள் இருக்க வேண்டும் இந்த போட்டிநிறைந்த துறைசார் கேள்வியானது ஊடகவியாளர்கள் தொடர்ச்சியாக பயிற்சிகளை மேற்கொண்டு கற்றல்நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் மீண்டும் தயார்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியத்தை உண்டுபண்ணுகின்றது சர்வதேச ஊடகவியாளர் சம்மேளனத்தை சேர்ந்த நாமும் இலங்கை ஊடகத்துறயினரைப்பொறுத்தமட்டில் இதேகுறிக்கோளை முன்னிறுத்திசெயற்பட்டுவருகின்றோம் ஊடகத்துறையினரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்ற சிக்கல் மிகுந்த பணியை சிறப்பாக மேற்கொள்ளத்தக்கதாக ஊடகத்துறையினருக்கான பயிற்சிகளை மேம்படுத்துவற்கும் அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் நாம் முயற்சிமேற்கொண்டுவருகின்றோம்

கேள்வி

ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் குறித்த துறையில் சிறப்புத்தேர்ச்சி பெறுவது உதாரணமாக பாதுகாப்பு செய்திகளை அறிக்கை யிடுதல் அன்றேல் விளையாட்டுச்செய்திகளை அறிக்கையிடுதல் ஊடகவியலாளர்களின் அதீத ஆற்றலை வெளிக்கொண்டுவர உதவுமா? அன்றேல் ஊடகவியலாளர் என்பவர் அனைத்து ஊடகத்துறையின் அனைத்து துறைகளையும் அறிக்கையிடுபவராக இருக்க வேண்டுமா? எது நன்மை பயக்கும் ?

பதில்
இந்தக்கேள்விக்கான பதில் இரண்டுமே சரி என்பதாகும் என நான் நினைக்கின்றேன் ஊடகவியலாளர்கள் அனைத்துவிடயங்கள் தொடர்பாகவும் பரந்துவிரிந்த புரிந்துணர்வைக்கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும் அதேபோன்று தாம் பணியாற்றுகின்ற துறையில் சிறப்பு புரிதலைக்கொண்டிருக்க வேண்டும் நல்லதொரு ஊடகவியலாளனுக்கு இவ்விரண்டு தேர்ச்சிகளும் அவசியமானதாகும் சிறப்பான ஊடகவியலாளன் எந்தவிடயத்தையும் அறிக்கையிட போதுமானவரையில் தயராக இருக்கவேண்டிய அதேவேளை குறிப்பாக ஒருவிடயத்தில் அசாதாரணமான அறிக்கையிடலாற்றலைக்கொண்டவராக இருத்தல் வேண்டும்

No comments:

Post a Comment