தோல்விகளால் துவண்டு நின்ற இந்திய அணியைத்தூக்கி நிறுத்திய தலைவனாக மகேந்திரசிங் தோனி திகழ்கின்றார் என்பதில் ஆச்சரியமில்லை
டுவன்டி டுவன்டி உலகக்கிண்ணத்தை வென்றுகொடுத்ததுடன் அவுஸ்திரேலிய முக்கோணத்தொடர்கிண்ணம் இலங்கை அணிக்கெதிரான தொடர்க்கிண்ணம் என தோனியின் வெற்றிப்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது இதில் பிந்திய வெற்றிக்கதையாகியிருப்பது நியுஸிலாந்து அணிக்கெதிராக நியுஸிலாந்து மண்ணிலே பெற்ற வெற்றி .
விளையாட்டுவீரனுக்குரிய ஆக்ரோஷமும் அலாதியான நிதானமும் கனவான் தோற்றமும் அனைத்துவீரர்களிடமும் ஒருங்கே இணைந்திருப்பதில்லை
ஆனால் தோனியைப்பொறுத்த மட்டில் இம்மூன்றுமே சங்கமதித்திருக்கின்றன என்றால் மிகையல்லவே !
நூறுகோடி மக்களின் விருப்புமிகு தலைவனோடு புகைப்படம் எடுத்துக்கொண்டதை நான் சிறுபிள்ளைத்தனமாகப் பார்க்கவில்லை .
No comments:
Post a Comment