வன்னியில் மனிதப்பேரவலம் நிகழக்கூடிய அபாயநிலைமை அனைத்துவிதமான சாத்தியக்கூறுகளுடனும் காத்துக்கிடப்பதாக மாற்றுக்கொள்கைக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கிசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
கேள்வி :
வன்னியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றிய அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக வினவியபோதே ?
பதில் ஐக்கியநாடுகள் தொண்டர் ஸ்தாபனங்களையும் ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களையும் வன்னியிலிருந்து அரசகட்டுப்பாட்டுப்பகுதிக்கு செல்லுமாறு உத்தரவிட்ட இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமானது மிகவும் வருந்தத்தக்கது ஐநா மற்றும் ஏனைய மனிதநேய பணியாளர்களின் பாதுகாப்பிற்கு தம்மால் உத்தரவாதம் வழங்கமுடியாது என்பதே இதற்கான அரசாங்கம் முன்வைத்த காரணமாகும் மூதூரில் நடைபெற்றதுபோன்ற இன்னுமொரு படுகொலை சம்பவம் இடம்பெறுவதைத்தவிர்ப்பதும இதற்கு காரணம் என அரசாங்கத்தரப்பில் இந்ததீர்மானத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது ஐக்கியநாடுகள் சபையுடனான உறவை எடுத்துநோக்குமிடத்து ஐநா பணியிலீடுபடும் அங்கத்துவநாடே அந்தநாட்டிலுள்ள ஐநா பணியாளருக்கான பாதுகாப்பை வழங்கியாகவேண்டும் தம்மால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியாது என குறித்த நாடு கூறும் இடத்தில் ஐக்கியநாடுகள் சபைசெயற்பட்டு தமது பணியாளர்களை விலக்கிக்கொள்வதே நடைமுறையாகும் ஆனால் வன்னியில் இருந்து தமது அலுவலகத்தையும் பணியாளர்களையும் வேறிடத்திற்கு மாற்றிக்கொள்வதாகவே ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளதேதவிர வெளியேறுவதாக தெரிவிக்கவில்லை இந்த அனைத்து சம்பவங்களின் பின்னாலும் இருக்கின்ற முக்கியவிடயம் யாதெனில் இங்கு ஒரு மனிதப்பேரவலம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்துக்காரணிகளுடனும் காத்துக்கிடக்கிடக்கின்றது என்பதே இங்கு உண்மையானதும் குறிப்பிட்டுக்கூறவேண்டியதுமாகும்.
கேள்வி கடந்தவாரம் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தீர்கள் அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது இதன்போது நீங்கள் அறிந்துகொண்ட விடயங்கள் யாது?
பதில் நான் வவுனியாவிலிருந்தபோது என்னோடு பேசிய அனைவரும் ஒரு சாதாரணவிடயத்தை வலியுறுத்திச்சொல்லியிருந்தனர் வன்னிமக்கள் அந்தப்பிரதேசத்திற்குள்ளேயே இருக்கவேண்டும் என விடுதலைப்புலிகள் விரும்புகின்ற அதேவேளை அரசாங்கம் அவர்களை வெளியேற்றிவிடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றது மக்களைப்பொறுத்தவரையில் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறும் சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது ஏனெனில் விடுதலைப்புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்காமை இதற்காக அவர்களது அதிகாரத்தைப்பயன்படுத்துகின்றமை ஒருகாரணம் இதனைத்தவிர வன்னியிலுள்ள குடும்பங்களைச்சேர்ந்தவர்களில் ஆகக்குறைந்தது ஒருவரேனும் வலுக்கட்டாயமாகவோ அன்றேல் சுயவிருப்பின் பேரிலோ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றனர் இவர்கள் சிலர் தமிழ்த்தேசியவாதிகள் இவர்கள் அங்கிருந்து போராடவேண்டும் என்ற நோக்கத்தைக்கொண்டிருக்கலாம் ஆனால் மிகமிகமுக்கியமானவிடயம் யாதென்றால் வவுனியாவிலுள்ள அரசாங்க நலன்புரி முகாம்கள் எப்படியிருக்கும் என்கின்ற தகவல்கள் கிடைத்துள்ளதே அனேமானோர் வன்னியில் இருந்து அரசகட்டுப்பாட்டுபகுதிக்கு வருவதற்கு விரும்பாமைக்கான காரணமாகும் நலன்புரிநிலையங்கள் என்பது திறந்தவெளி தடுப்பு முகாம்கள் என்றே அவர்கள் அறிந்துவைத்திருக்கின்றார்கள் அன்றேல் அன்றேல் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் களிமோட்டை என்ன நடைபெறுகின்றது என்பதை நாம் அனைவருமே அறிந்துவைத்திருக்கின்றோம் அத்தியாசிய தேவைப்ப+ர்த்திசெய்வதற்கு அவசியமான வசதிகள் இன்மை மட்டுமன்றி அங்கு கடத்தல்கள் கொலைகள் காணமற்போதல்கள் என்பன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன கறுப்பு முகமூடி அணிந்த ஒருவர் முகாமினுள் கொண்டுவரப்படுவதுடன் யார் யார் விடுதலைப்புலிகளின் ஆதரவாளரர் அன்றேன் அனுதாபிகள் என இனங்காணப்பட்டுவது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அந்தவகையில் வன்னியிலுள்ளவர்களை எந்தவகையிலேனும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்திப்பார்க்கவிளையும் அது சூழ்நிலையில் முடியுமானதே வன்னியைச்சேர்ந்தோரில் அனேகமானோர் விடுதலைப்புலிகளின் பொதுமக்கள் தற்காப்பு பயிற்சியை எடுத்தவர்களாவர் என்றவகையில் தேவையேற்பட்டால் அவர்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்திப்பார்க்கும் சாத்தியக்கூறுகள் அனேகமாகக்காணப்படுகின்றது இடம்பெயர்ந்துவருவோருக்கான தற்காலிக தரிப்பிடமாக வவுனியா இருக்குமிடத்து அங்குள்ள நிலைமையை தீவிரமாக ஆராயவேண்டியது அவசியமாகும் ஏனெனில் இலங்கையின் பிரதேசங்களை எடுத்துபார்க்கின்றபோது அதிகளவிலான ஆயுதந்தரித்த குழுக்கள் அமைப்புக்கள் உளள் பகுதிகளிலொன்றாக வவுனியா காணப்படுகின்றது ஏறத்தாழ அனைத்துதரப்பினருமே அங்கு காணப்படுகின்றனர் பாதுகாப்பு படையினர் விடுதலைப்புலிகள் ரிஎம்விபி புளொட் என யார் வேண்டுமானாலும் அங்கு காணப்படுகின்றனர் அங்கு கடத்தல்கள் அதிகரித்துள்ளது காணமல்போதல்கள் அதிகரித்துள்ளது நாம் அங்குள்ள வைத்தியர்கள் வழக்கறிஞர்கள் வர்த்தக சமூத்தினருடன் பேசியபொழுது அவர்கள் குறிப்பிட்ட விடயம் யாதென்றால் தொலைபேசி இணைப்பு இருக்குமிடத்து அவர்கள் உள்வரும் அழைப்புக்களுக்கு பதில் அளிப்பதில்லை எனத்தெரிவித்தார்கள் கப்பமாக பணம் கேட்டு அழைப்புவரும் என்ற அச்சமே இதற்குகாரணம் என அவர்கள் சுட்டிக்காட்டினர் துணை இரர்ணுவக்குழுக்கள் சட்டத்திற்கு அப்பால் தமக்குத்தேவையானவகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர் வன்னியில் உள்ளக இடப்பெயர்விற்குள்ளாகி உள்ள மக்கள் வந்தாலும் வராவிட்டாலும் வவுனியாவில் உள்ள சூழ்நிலையானது தற்போதையநிலையில் பொதுமக்கள் தங்குவதற்கு நிச்சயமாக ஏற்புடையதாகவில்லை என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி : அடுத்த என்ன நடக்கும் என்ற அச்சநிலை அனைவரையுமே ஆட்கொண்டிருக்கின்றது நீங்கள் நிலைமைகளை எங்கனம் நோக்குகின்றீர்கள் ?
பதில் தற்போதுள்ள மிகவும் கவலைக்கிடமான நிலைமையாதென்றால் அரசாங்க படையினர் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்பதில் தெளிவாகவுள்ளனர் மறுமுனையில் விடுதலைப்புலிகளோ பொதுமக்களை தம்மோடு வைத்துக்கொண்டு கேடயமாக்கப்பார்க்கின்றனர் இந்நிலையில் பொதுமக்கள் நகராதவிடத்துஇராணுவத்தினர் அந்தப்பகுதியை நோக்கி குண்டுத்தாக்குதலை மேற்கொள்ளப்போகின்றனரா என்பதே கேள்விக்குறியாகவுள்ளது ஏனெனில் மக்கள் அனைவரும் ஒருகுறித்தபகுதியினுள்ள இடம்பெயர்ந்தநிலையில் செறிவாக அடைக்கலம் பெற்றுள்ளனர் அப்படியான நிலையில் மக்கள் வெளியேற்றுவதற்காக இராணுவத்தினர் குண்டுத்தாக்குதலை நடத்துவார்களா தொடர்ந்சியான படைவலுவைப்பயன்படுத்துவார்களா என்ற அச்சநிலைகாணப்படுகின்றது அப்படிநிகழுமிடத்து அங்கு இழப்புக்கள் ஏற்படும் அப்படியான நிலைமை சாத்தியமற்ற பட்சத்தில் பழைமையான பட்டினிபோடும் உபாயத்தை அரசாங்கம் பயன்படுத்த போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது மக்களை வெளியே கொண்டுவருவதற்காக உணவையும் அடிப்படை விநியோகங்களையும் பணயமாக பயன்படுத்த உத்தேசம்கொண்டுள்ளனரா என்ற கேள்வி எழுகின்றது இந்த இரு சூழ்நிலையிலும் மக்களின் நலன்புரிவிடயத்தில் பெரிதும்கரிசனையற்ற இரு ஆயுதந்தரித்த தரப்பினர் மத்தியில் நிர்க்கதியற்ற பொதுமக்கள் சிக்கிக்கொண்டு பெரும் இன்னல்களை எதிர்நோக்கவேண்டிய நிலைமையே காணப்படுகின்றது .
No comments:
Post a Comment