Monday, March 16, 2009

மடுப்பகுதிக்குள் செல்ல எமக்கே இன்னமும் அனுமதிதரப்படவில்லை இந்தநிலையில் மாதாவின் திருச்சொருபத்தை எப்படிக்கொண்டுவருவது ?




வாழ்வைத்தொலைத்து நிற்கின்ற மக்களின் எதிர்காலம் என்னவாகப்போகின்றதோ என்ற கவலை என்னை ஆட்கொண்டுள்ளது
மன்னார் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு என்ற பகுதிகளுக்குள்ளே சமாதான பிராந்தியங்களை ஏற்படுத்தி இந்த சண்டை நேரத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வழிவகைகளை அரசாங்கம் செய்யவேண்டும்


இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் இந்தப்பிரச்சனைக்கு தீர்வுகாணமுடியும்


பேட்டி கண்டவர் ஆ.அருண்



யுத்தத்தினால் ஒருபோதும் நன்மை வரப்போவதில்லை அழிவுகளே மிஞ்சும் தமது வாழ்நாள் பராகவும் கஷ்டப்பட்டு வாழ்வையே அர்ப்பணித்து கட்டிய இல்லங்கள் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மக்கள் இன்று யுத்தத்தல் இழந்துநிற்கின்றார்கள் மன்னார் மாவட்டத்தின் பலபகுதிகளிலுள்ள வீடுகளும் கட்டிடங்களும் இன்று முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக வேள்வியுறுகின்றேன் இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டுள்ளவர்களின் எதிர்காலம் என்னவாகப்போகின்றது யார் இதனைக்கட்டித்தரப்போகின்றனர் என்ற கவலையால் தினமும் வேதனைகொள்கின்றேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவிக்கின்றார்

எமக்களித்த பேட்டியின் போதே மன்னார் மறைமாவட்ட ஆயர் இந்தக்கருத்துக்களைத்தெரிவித்தார்

கேள்வி :யுத்த சூழ்நிலை உக்கிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில் இறைபணிக்கு மேலதீகமாக பல்வேறு பணிகளில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக அறிகின்றோம்.அந்தப்பணிகள் யாவை என எமது மக்கள் அறியவிரும்புகின்றனர் சற்று விபரமாக கூறுங்கள் ?

பதில் :

நான் மட்டுமல்ல என்னுடைய அனைத்துக்குருக்களும் உதவியாளர்களும் இந்தக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப எமது பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம் இதில் சிறப்பாக ஆன்மீகப்பணிகளை செய்துவருகின்றோம் ஏனெனில் ஆன்மீகப்பணிகள் தான் துன்பங்கள் துயரங்கள் மத்தியிலே மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக்கொடுத்து அவர்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றது அதுமட்டுமன்றி இன்றைய காலச்கட்டத்தில் மக்கள் படுகின்ற துன்பங்கள் துயரங்கள் மக்கள் படுகின்ற அவலங்கள் போராட்டங்களின் மத்தியிலே நாங்கள் அவர்களுடன் இருக்கின்றோம் சிறப்பாக மக்களின் அன்றாடத்தேவைகளை அவர்களின் துன்பங்கள் துயரங்களை உயரதிகாரிகளிடம் எடுத்துச்சென்று விடுதலையை நிவாரணங்களைப்பெற்றுக்கொடுக்க இயன்றவரை முயற்சித்துவருகின்றோம் மனித உரிமைமீறல்கள் மக்களுடைய அலைக்கழிப்புக்கள் அகதிமுகாம் வாழ்க்கை இடப்பெயர்வு கல்விவசதியின்மை போன்ற பல்வேறு துன்பங்களால் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றவேளை சிறப்பாக இந்த போர்க்காலச்சூழலில் அவர்களின் துன்பங்களைத்துடைப்பதற்காக பெரும்பணி ஆற்றிவருகின்றோம் .இந்த நாட்டிலுள்ள துன்பத்திற்கெல்லாம் போர் என்ற இந்த அரக்கனே காரணமாக இருக்கின்றது ஆகவே இந்தப்போரை நிறுத்துவதற்கு அதற்கான காரணங்களைக்கண்டுபிடித்து அவற்றை நீக்க முயற்சி எடுக்கின்றதன் வாயிலாக போரை நாங்கள் முடிவி;ற்கு கொண்டுவரலாம் ஒரு பகைவனைக்கொல்லுவதனாலே எந்தப்பிரச்சனையும் முடிவிற்கு வந்துவிடப்போவதில்லை பகைமையை நாங்கள் தோற்கடிக்க வேண்டும் அதனால பகைவனைத்தோற்கடிக்கலாம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாங்கள் அரசாங்கத்துடனும் விடுதலைப்புலிகளுடனும் மற்றும் பல்வேறு கட்சிகளைச்சேர்ந்தவர்களுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுவருகின்றோம் அண்மையில் கூட நான் சர்வமத அமைப்பில் நான் சேர்ந்திருக்கின்றேன் அது இலங்கையில் மட்டுமன்றி உலக ரீதியாகவும் முன்னெடுக்கப்படுகின்ற முயற்சியாகும் நாட்டில சமாதானத்திற்காக நான்கு சமயங்களைச்சேர்ந்தவர்களும் அதிலே அங்கத்துவம் வகிக்கின்றனர் கத்தோலிக்க திருச்சபை இதிலே முக்கியமாக பங்களிப்புச்செய்கின்றது ஏனைய கிறிஸ்தவ சபைகளும் அதில் அங்கம்வகிக்கின்றன மக்களின் துன்பங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் இடைஞ்சல்கள் நடக்கின்ற அநியாயங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவனம்செலுத்தி செயற்பட்டுவருகின்றோம் இந்த துன்பங்களையும் இடைஞ்சல்களையும் நீக்குவதற்கான அத்ததியாவசியமான தேதவை இருக்கின்றது ஏனெனில் அதுவே சமாதானத்திற்கான அடித்தளமாகும்

கேள்வி
சர்வதேச மதத்தலைவர்களின் அமைப்பில் நீங்களும் ஒரு அங்கத்தவராக இருக்கின்றீர்கள் இந்த அமைப்பின்; பணிகள் யாவை ?
பதில் :
சர்வதேச மதத் தலைவர்களின் அமைப்பு இலங்கை சமயத் தலைவர்களின் மன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதனுடைய நோக்கம் என்னவென்றால் இந்த நாட்டில் சமாதானத்தை விரும்புகின்றவர்கள் தற்போதுள்ள குழப்பமான சூழ்நிலையில் பகைவனை வெல்லவேண்டுமென்றால் பகைமையை வெல்ல வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு அமைய நாங்கள் செயற்படுகின்றோம். அதனடிப்படையில் நாம் செயற்படும் போது படிப்படியாக தற்பொழுது நாட்டில் வாழ்கின்ற மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றி சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லி அந்த பிரச்சினைகளை எவ்வளவிற்கு குறைத்து மக்களின் சகவாழ்வாக மாற்ற முடியுமோ அவ்வளவிற்கு அவர்களை செய்ய வேண்டுமென்று நாம் கேட்டுக் கொள்கின்றோம். யுத்தம் நடந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையிலே மக்கள் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளும் அவர்களுடைய வாழ்வினுடைய வளங்களும் குன்றாதிருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளும்படி நாம் கேட்டுக் கொள்கின்றோம். ஏனென்றால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடஇலங்கையிலே வாழ்கின்ற மக்கள் அகதிகளாக்கப்பட்டு ஆயிரக் கணக்கிலே அவர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். தங்களுக்கு நாளை என்ன நடக்கும் எங்கு போய் தங்குவது எவரிடம் போய் கையேந்துவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். குறிப்பாக வன்னி பகுதியில் தற்பொழுது இராணுவ நடவடிக்கை நடைபெறுவதனால் ஒரு விதமான நம்பிக்கை இல்லாத ஒருபயணத்தில் பத்து பதினைந்து தடவைகள் திரும்பத் திரும்ப இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆகவே எங்களுடைய ஒரு முயற்சியாக வன்னிக்குள் இருக்கும் மன்னார் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு என்ற பகுதிகளுக்குள்ளே சமாதான பிராந்தியங்களை ஏற்படுத்தி இந்த சண்டை நேரத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வழிவகைகளை அரசாங்கம் செய்யவேண்டும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசசார்பற்ற அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும் ஐ.நா அதிகாரிகள் அதற்கு அடிகோல வேண்டுமென்று நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இப்படியாக ஜனாதிபதியை சந்தித்த போதும் அவரிடம் சென்று மக்கள் அனுபவிக்கின்ற அன்றாட துன்பங்களை பற்றி சொல்லியிருக்கின்றோம். மக்கள் காணாமல் போகின்றமையும் பிரேதங்களாக வந்து வீசிவிட்டு Nபுhகின்றமையும் அடுத்தது எந்தவிதமான விசாரணைகளும் இல்லாமல் கொல்லப்படுகின்றதும், இப்படியான ஒரு அவல நிலையை மக்கள் சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் அப்பகுதிகளில் இலங்கையில் எல்லா இடங்களிலும் கொழும்பிலும் கூடத்தான் இவை நடந்து கொண்டிருக்கின்றன. கொழும்பில் கொட்டாஞ்சேனை என்ற பகுதியில் கடைசி ஒரு வாரத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளனர். வர்த்தகர்கள் சுட்டுக் கொல்லப்டுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள். மன்னார் மாவட்டத்திலும் வவுனியா மாவட்டத்திலும் கிழக்கிலும் தொடர்ந்து இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. இப்படியாக எங்கள் சொந்த மக்களுடைய இரத்தத்தை சிந்தி அவர்களுடை வாழ்க்கையில் எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் இருக்கின்ற நிலைமையை உருவாக்க கூடாது. ஆகவே நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றுபட்டு சமயத் தலைவர்கள் இந்த நாட்டிலே மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். மக்களுடைய சிந்தனைகளை திருப்பக் கூடியவர்கள். சகல மக்களோடு சேர்ந்து அவர்களை தயார் செய்து சமாதானத்திற்கான சிந்தனைகளை அவர்களிடத்தில் புகட்டி தலைவர்களிடத்தில் சென்று எங்களுடைய நோக்கத்தை நாம் அவர்களிடம் புகட்டி வருகின்றோம். இதன் வழியாக எங்களால் இயன்றளவு சமாதானத்தை காணவேன்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகின்றோம்,


கேள்வி :
மன்னார் மாவட்டத்தில் தற்போது நிலைமைகள் எவ்வாறு காணப்படுகின்றது ?
பதில் :
முசலிப்பகுதியைச்சேர்ந்த சுமார் நான்காயிரம் பேர் அரசபடையினரால் உடனடியாக வெளியேறவேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டதனால் அவர்கள் எல்லாப் பொருட்களையும் அவர்களுடைய வலைகள், போட்டுகள் எல்லாப் பொருட்களையும் விட்டு கையில் கொண்டு செல்லக் கூடிய பொருட்களை மட்டும் தூக்கிக் கொண்டு செல்லநேரிட்டது ஏனெனில் அவர்கள் நடந்துதான் போகவேண்டும் ஆற்றைக் கடந்து போக வேண்டும். ஆகவே அவர்களால் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாமல் போனது. அவர்கள் விடுவிக்கப்பட்ட முசலிப் பகுதி கிராமத்தில் போய் இருக்கிறார்கள். அங்கு ஒருவரும் இல்லை. ஆகவே அந்த மக்கள் சொல்லொனா துன்பம் அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு உழைப்பிற்குரிய வசதியில்லை. தங்குவதற்கு வசதிகள் இல்லை. சின்ன கொட்டில்களில்தான் இருக்கிறார்கள். இந்த வருடத்தில் பங்குனி, சித்தரை மழை வந்து மிகவும் மோசப்படுத்திவிட்டது. போன வருடம் செப்டெம்பரில் அவர்கள் இடம்பெயர்ந்தது. அதன் பிறகு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த மழை மூன்று மாதத்திற்கு நீடித்த மழையினால் தண்ணீருக்குள் கிடந்து பெரிய வருத்தங்களுக்கும், நோய்களுக்கும் குறிப்பாக பிள்ளைகள் அதிகமாக தொற்று நோய்களுக்கும் அவர்கள் உட்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கல்வி மற்றும் ஒழுக்கம் பாழாகப் போகிறநிலைமை காணப்படுகின்றது, கிராமத்தினுடைய கட்டுப்பாடு இல்லாத நிலையில் சமய அனுசாரங்களைப் பின்பற்றமுடியாமல் ஒழுக்கக்கட்டுப்பாடு சீர் குலையும் நிலை தோன்றியுள்ளது. இப்படியான ஒரு நிலையில் இந்த தமிழ் மக்களின் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக Nபுhயுள்ளது. ஆகவே அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளுக்கு சென்று கிராமங்களின் கட்டுக் கோப்பிற்கு அமைய அவர்கள் தொடர்ந்தும் பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்பது கண்டிப்பாக தேவையாய் உள்ளது. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் இழந்துள்ளார்கள். அன்றாடம் கொடுக்கப்படுகின்ற உணவுகளைத்தான் அவர்கள் உண்ண வேண்டியிருக்கின்றது. சில வேளைகளில் சிலர் தொழிலுக்கு போகக்கூடியதாய் இருக்கின்றது. அதுமட்டுமல்ல முசலிப் பகுதியில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் அந்த காலத்தில் இப்பகுதி விடுதலைப் புலிகளின் பிரதேசமாக இருந்ததினால் அவர்களின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களினால் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் இந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ பயிற்சிக்கு போயுள்ளனர். ஆனால் தற்பொழுது யார் யார் பயிற்சிக்கு சென்றார்கள் என்று கேட்டு அவர்களை முகாமிற்கு வரச்சொல்லி அவர்களுக்கு அடிப்பதும் துன்பப்படுத்துவதும் வழமையாகி விட்டது. 25 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு உணவு பொருட்களை கொடுத்திருந்தாலும் கூட அவர்கள் அடையாளம் காணப்படுவதுடன் காணமல் போகும் நிலமை இந்த அகதிகள் மத்தியில் தோன்றியுள்ளது. வன்னிக்குள் கிட்டத்தட்ட 40000 பேர் இடம்பெயர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். மன்னார் மாவட்டததில் விடுவிக்கப்படாத இடம் என்று சொல்லக்கூடிய மன்னார் மாவட்டத்தின் அந்த பகுதிகளில் இருந்த சுமார் 39000 பேர் மல்லாவி, வன்னி பகுதிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு போனாலும் அவர்களுக்கு எவ்வளவு தூரத்திற்கு பாதுகாப்பு இருக்கும் என்பது தெரியாது. ஆகவே பெரிய ஒரு அங்கலாய்ப்போடுதான் அவர்களும் போய்க் கொண்டு இருக்கிறார்கள். மாந்தை மேற்கு என்ற பிரதேச அலகில் இருக்கின்ற மக்கள் அவ்வளவு பேருக்கும் எல்லா வீடுகளும் தரைமட்டமாகிப் போய்விட்டது. அங்கு ஒன்றுமே கிடையாது நாம் பார்க்கின்ற அளவிக்கு. ஆகவே அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கூறமுடியாதுள்ளது. அவர்கள் வாழ்க்கை முழுவதும் தேடி சம்பாதித்து கட்டிய வீடுகள் தரைமட்டமாகிப் போயுள்ளது. பாடசாலைகள் கோயில்கள் எல்லாம் போய்விட்டது. இப்படியான நிலமைதான் அங்கு காணப்படுவதாக கேள்வியுற்Nறுன். ஆனால் நேரில் சென்று பார்வையிடவிலலை. ஆகவே இப்படியானதொருநிலையில் யார் இவற்றைக்கட்டிக்கொடுக்கப்போகின்றனர் இந்த மக்களுக்கு மறுவாழ்வுகொடுக்கப்போறது யார் எப்பமுடியப்போகுது யார் வரப்போகின்றனர் எப்பமுடியப்போகுது என்று சொல்லி மக்கள் அங்கலாய்ப்புடன் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் நான் அந்தப்பகுதிக்கு எட்டுக்குருக்களை அனுப்பி மக்கள் மத்தியில் பணிசெய்து வருகின்றோம் அவர்களுடன் இருந்து இந்த இக்கட்டான தருணத்தில் நம்பிக்கையை ஊட்டிவருகின்றோம் மன்னாரிலிருந்தும் குருக்கள் சென்று மக்களை வீடுகளில் சந்தித்து நான்கு ஐந்துநாட்களுக்கு அவர்களோடு வழிபாடுகளைநடத்தி அவர்களை ஊக்கப்படுத்துகின்றோம் எந்தமதத்தைச்சேர்ந்தாலும் எல்லா மக்களும் எமக்கு தேவையானவர்கள் எமது சமூகப்பணிமூலம் தேவையான உதவிகளைச்செய்துவருகின்றோம்
கேள்வி :
மடுப்பிரதேசம் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் அங்கே திருச்சொருபத்தை மீண்டும் கொண்டுவருவதற்கோ திருவிழாவை நடத்துவதற்கோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தென்பகுதி ஊடகங்கள் சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன இதன் உண்மையான நிலைமை என்ன ?
பதில் :
இரண்டு பகுதியும் போராடி கொண்டிருந்ததால் திருச்சுரூபத்தை நாங்கள் மடுவில் வைத்திருக்க முடியாது ஏனென்றால் அங்கு ஆபத்திருந்தது. வீட்டு வளாகத்திலேயே அருட்தந்தையர்கள் வாழ்கின்ற அறைவீடுகளிலே அவர்களது சாப்பாட்டு அறைகளிலேயே ஷெல் வந்து விழுந்து, அங்கு ஆபத்தான நிலை காணப்பட்டது கடைசியிலே அங்கே நான்கு அருட்தந்தையர்களை ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொண்டு இருக்கும்படி அங்கு விட்டிருந்தேன் இவர்களைத்தவிர அருட்சகோதரிகள் மூவர் உட்பட ஏழுபேர் அங்கு இருந்தாங்க. கடைசி கட்டத்தில அங்கு இருக்க முடியாத நிலை பேராபத்தான சூழ்நிலை எல்லா இடமும் ஷெல்வீச்சுக்கள் அங்க இருக்க முடியாத நிலை பேராத்திற்கு மத்தியில் எல்லாவிடமும் ஷெல் அடி நடைபெற்றுக்கொண்டிந்தது எழும்பிப்போகமுடியாத நிலை பதுங்குகுழிக்குள் இருந்துவிட்டு கடைசியாக 3ஆம் திகதி திருச்சுருபத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் வேறிடத்திற்கு போனார்கள். மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர்கள் வாழ்கின்ற அந்தப்பகுதியை ஏழுபங்குகளாக பிரித்துள்ளனர் அதில் ஆறு பங்குகளிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டனர் ஏழாவது பங்கான கடைசியில் இருக்கிற தேவன்பிட்டி பங்கில் அது மன்னாருக்கும் கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள தேவன் பிட்டி என்ற பங்கில் தான் மக்கள் இருந்தார்கள் அங்கு தான் சுரூபத்தை வைத்திருக்கின்றோம் ;மக்களோடு மாதாவும் இடம்பெயர்ந்த அவலம் நடைபெற்றுள்ளது ;. 1990ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெயர்ந்த மக்கள் மாதாவிடம் தான் ஓடிவந்தனர் ;. இப்போது மாதா அவர்களைப்போய்த்தேடி அங்கே இருக்கின்;றா. நான் திரும்பவும் சுருபத்தை கொண்டுவருவதாக இருந்தால் மடுவிற்கு தான் கொண்டு வருவேனே தவிர வேறு எங்கேயும் கொண்டு போய்வைத்திருந்துவிட்டு திரும்பி மடுவிற்கு கொண்டு வரமாட்டேன். மடுவிற்கு கொண்டுவருவதாக இருந்தால் முதலில் எங்களை விடவேண்டும்.; இராணுவத்தினர் மடு பிராந்திpயத்தை கைப்பற்றிய பின்னர் எங்களையே அங்கு விடவில்லை. இதுவரையில் அருட்தந்தையர்ரொருவரை ஒரு முறை அங்கு அழைத்து சென்று 45 நிமிடம் சுற்றி காட்டிவிட்டு அனுப்பியிருந்தார்கள். நான் அங்கு போகவேண்டும் என்று வேண்டுகோள் விடு;த்திருந்தேன் அதற்கு இன்னமும் அனுமதிதரவில்லை மடுவிற்கு பொறுப்பான அருட்தந்தை அடங்கலாக மூன்று அருட்தந்தைமார்களதும் எங்களுக்கு உதவிசெய்யக்கூடியதாக அங்கு திருத்த வேலைகளை செய்யக்கூடியதாக நான்குபேர்களதும் பெயர்களை அடையாள அட்டை இலக்கம் சகிதமாக கொடுத்திருந்தோம் எனினும் இரண்டுமாதங்களாகியும் அங்கு போகின்றதற்கு பாதுகாப்பு காணாது என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர் . ஆனால் இன்னும் ஒரு பதிலும் வரவில்லை. ஆகவே முதலில் நாங்கள் அங்கு போக வேண்டும். எங்களுக்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க வேண்டும். ஆலயம் ஷெல் விழுந்து உடைந்து கிடக்கிறது. அதனைத் திருத்த வேண்டும். கிணறுகளை எல்லாம் துப்பரவாக்க வேண்டும். ஷெல் விழுந்து முதலைகள் எல்லாம் இறந்து கிடக்கும். குளங்களை துப்பரவு செய்ய வேண்டும். தண்ணீர் வசதிகளை பார்க்க வேண்டும். மின்சார வசதிகளை பார்க்க வேண்டும். மலசல கூட வசதிகளை நாம் பார்க்க வேண்டும்.இவற்றைசெய்யவதற்கு சில நாட்கள் செல்லும் இவற்றை எல்லாம் செய்தால் தான் நாம் சுரூபத்தை கொண்டு வர முடியும். மக்கள் வந்து தங்கும் விடுதிகளில் கண்ணிவெடி இருக்கக் கூடும். அவற்றை அகற்ற வேண்டும். மடு வீதியால்; தான் மடுத்திருத்தலத்திற்கு; போக வேண்டும். அந்த வீதியிலும்; கண்ணி வெடி இருக்க்கூடும் அவற்றையும் அகற்ற வேண்டும். இதையெல்லாம் அகற்றித்தந்தால் தான்; மடு மாதா திருவிழாவை அங்கு நடத்தமுடியும் . அதற்கு முதலில் அங்கு எங்களைப் போகவிட்டு நாங்கள் திருத்தவேலைகளை செய்யமுடியுமாக இருந்தால் திருச்சொருபத்தை அங்கு கொண்டுவந்து அரங்கேற்றுவோம் அதன் பிற்பாடு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அது மட்டுமின்றி அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் மடுமாதாவை சுற்றியுள்ள இரண்டரைக்கிலோமீற்றர் பகுதியை சமாதானவலயமாக யுத்த சூனிய பிரதேசமாக கருதி மதித்து எழுத்து மூலம் எமக்கு உறுதிதர வேண்டும். இருதரப்பினரும் இதுதொடர்பில் நல்லமனத்துடன் சாதகமான நிலைப்பாட்டைக்கொண்டிருப்பதை நான் அறிவேன் மடுத்திருத்தலப்பகுதியில் இருந்து இரண்டரைக்கிலோமீற்றர்தூரத்தில் இருக்கப்போவதாக படையினர் ஏற்கனவே எழுத்தித்தந்துள்ளனா அவர்கள் மடுவிற்குள் இல்லை.ஏற்கனவே வெளியே தான் இருக்கிறார்கள். அதேபோல விடுதலைப்புலிகளுடன் சென்று பேசி அவர்களது அதற்கான முழு ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்பியிருக்கின்றோம் ஆகவே இது எல்லாம் நடந்தால் நாங்கள் திருவிழாவை நடத்தலாம் மக்களை நாங்கள் ஆபத்தான சூழலில் கூட்டிக் கொண்டு வந்து திருவிழாவை நடத்தவேண்டிய அவசியம் கிடையாது இந்தவருடம் திருவிழா நடக்கும் என்று நிச்சயமாக கூறமுடியாது ஆடித்திருநாள் இரண்டாம் திகதி நடக்கவேண்டும் அது நடக்கவில்லை ஆவணித் திருநாள் ஆவணி 15ஆம் திகதி நடைபெறவேண்டுமானால் அதற்குரிய ஆயத்தங்களை ஆறாம் திகதி தொடக்கம் செய்ய வேண்டும். ஆகவே அதுவும் சாத்தியப்படாது என்று தான் நான் நினைக்கின்றேன் எங்களுக்கு இன்னும் அனுமதித் தரவில்லை. எப்ப தருவார்கள் என்றும் தெரியவில்லை. ஆவணிக்கு பி;ன்னர் ஒக்டோபர் மாதத்தில் தான் அங்கு திருவிழா இருக்கின்றது செபமாலை மாதா திருவிழா நடைபெறுவதுண்டு சூழ்நிலை சாதகமாக அமைந்தால் நாங்கள் அதனைக்கொண்டாடக்கூடும் மக்கள் வராவிட்டாலும் திருப்பலி ஒப்புக்கொடுத்துஅதனை நாங்கள் கொண்டாடக்கூடும் அதன் பிறகு அடுத்தவருடத்தில் எல்லாம் சுமூகமாக நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

கேள்வி :
மதவாச்சி சோதனைச்சாவடியை கடந்துவருகின்ற போது மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக பலதடவைகளில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் உண்மையில் அங்கு தற்போது என்ன நடைபெறுகின்றது ?
பதில் :
மக்கள் அங்கு வரும் போது மிகவும் கஷ்டமான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் அங்கு தேவையற்றவிதமாக மக்களின் நேரத்தை வீணடிக்கின்றனர் ஏனென்றால் அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களே சோதனையிடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் நான் ஒருமுறை வரும் போது சுமார் மூன்று மணித்தியாலங்கள் அங்கு நிற்க வேண்டியேற்பட்டது அப்படிப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு அதிலும் பார்க்க மோசமாகத்தான் இருக்கும் அங்கே சரியான முறையில் சோதிப்பதற்கு ஆட்கள்பற்றாக்குறையுள்ளது இடமும் போதாது பல்;வேறு பரவலாக்கப்பட்ட சோதனையை செய்வதற்காக ஒழுங்குள்ளது மனிதரீதியாக மக்களுடைய துன்பங்களைக்கண்டு துன்பங்களை எப்படி நீக்கலாம் எப்படிக்குறைக்கலாம் என்று பார்க்கவேண்டும் இந்தநாட்டின் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதென்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் அதேவேளை பாதுகாப்பு பிரச்சனைக்கு முகங்கொடுத்து மக்களின் வசதிக்கு முகங்கொடுக்கவேண்டும் மக்களின் வாழ்க்கைக்காகவே பாதுகாப்பு ஆகவே மக்கள் வேண்டாம் என்று சொல்லி பாதுகாப்பு தான் வேண்டும் என்று சொல்கின்றது எம்மைப்பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளமுடியாதது ஒரேநேரத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு மக்களுக்கு செய்யவேண்டிய சேவையை அவர்க்ள சுதந்திரமாக போக்கு வரத்து செய்யக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும் ஏனெனில் சொந்த நாட்டில் போக்குவரத்து செய்வதென்பது அடிப்படை மனித உரிமையாகும் வாகனங்களில் தென்பகுதிக்கு வரமுடியாது இங்கிருந்து அந்தப்பகுதிக்கு போகமுடியாது சோதனைக்காகவென்று வாகனங்களில் கொண்டுவரப்படும் பொருட்களைக்கொட்டி இறக்கி ஏற்றப்படுகின்றது வியாபாரத்திற்காக கொண்டுவரப்படும் அரிசியையும் கொட்டி இறக்கி ஏற்றும்போது மண்ணும் சேருகின்றவாய்ப்புண்டு மன்னாரில் என்றாலும் வவுனியாவில் என்றாலும் விவசாயமும் மீன்பிடியும் தான் எமது மக்களின் தொழிலாகவிளங்குகின்றது அங்கு பிடிக்கப்படும் மீன்களை இங்கு அனுப்புவதற்கு அவர்கள் முகங்கொடுக்கும் துன்பங்கள் சொல்லோணாதவையாகும் ஐஸ்ஸில் கொண்டுவரும் மீன்களை ஒவ்வொன்றாக இறங்கி காண்பித்துமீண்டும் ஏற்றுவது என்பதெல்லாம் பெரும் இடைஞ்சலாகவே உள்ளது அதுமட்டுமல்ல வாகனங்களில் பயணிக்கவேண்டிய மக்கள் எத்தனையோ பேர் உள்ளனர் இந்தப்பகுதியிலும் ஒரு வாகனத்தைப்பிடித்து அடுத்தபகுதியிலும வாகனத்தைப்பிடிக்க அவர்களால் அவர்களால் முடியாது சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் நேரடியாக சொந்த நாட்டில போய்வரக்கூடியதாக இருக்கவேண்டும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ள எத்தனையோ நாடுகள் இப்படியெல்லாம் தடுத்து வைத்திருப்பதில்லை அவர்கள் சோதனைச்சாவடிகளில் நவீனரக இலத்திரனியல் சாதனங்களைக்கொண்டுவந்து சோதனைகளை மேற்கொள்கின்றனர் தற்போதைய காலகட்டத்தில் ஆயுதங்களை கொண்டுசெல்கின்ற இடங்களில் சோதனைசெய்வதற்காக புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் எல்லாம் உள்ளன மனித உரிமைகளைப்பாதுகாப்பதற்காகவே இவ்வாறான வசதிகளை செய்துகொடுத்துள்ளனர் ஏனைய இடங்களில் அதை நாங்களும் பெற்று பாவனைக்குட்படுத்தி மக்களின் வசதியைக்கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் இப்படிப்பட்ட நிலைமை காணப்படுகின்றதென எடுத்துச்சொல்லி வேறு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தால் அப்படிப்பட்ட சாதனைக்களை எத்தனையோ நாடுகள் அன்பளிப்பாகவே கொடுக்கப்கூடிய நிலைமை இருக்கின்றது ஜனாதிபதியைச்சந்தித்த போதும் இதனை நான் எடுத்துக்கூறியிருந்தேன்






கேள்வி

பேச்சுவார்தைத்தைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகிவருகின்றன சமீபத்தில் சர்வமதத்தலைவர்கள் ; ஜனாதிபதியைச்சந்தித்தபோது விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக்கீழே வைக்குமிடத்து பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளதாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.நீங்களும் அந்தக்குழுவில் இடம்பெற்றிருந்தீர்கள் அரசியலுக்கு நீங்கள் அப்பாற்பட்டவராக நீங்கள் இருந்துவருகின்றபோதிலும் மக்களின் பிரச்சனைகளை உடனிருந்தே அறிந்தவருபவர் என்றவகையில் மூன்றாவது தசாப்தத்தில் ஆயுதப்போராட்டமாக பரிணமித்துச்செல்கின்ற இந்த இனப்பிரச்சனைக்கான தீர்வு எதுவாக அமையமுடியும் தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தை சாத்தியமாகுமா?


பதில்

தற்கால சூழலில் ஆயுதங்களைக்கீழவைக்கவேண்டும் என்ற கூற்று பிரச்சனைகளை அணுக விரும்பாதவர்கள் சொல்லுகின்ற ஒரு கூற்றாகத்தான் இருக்கின்றதே ஒழிய உண்மையாகவே இந்தப்பிரச்சனையை அணுக வேண்டும் என்று இதய சுத்தியுடன் சிந்திக்கின்றவர்கள் அப்படிப்பேசமாட்டார்கள் ஏனென்றால் அது தற்போதைய நிலையில் நடக்கப்போகின்ற விடயமல்ல யார்தான் அப்படிச்செய்வார்கள் ஆயுதங்களை வைக்கவேண்டும் என்றால் இரண்டுபகுதியும் ஆயுதங்களை வைக்கவேண்டும் என்று தான் அவர்கள் சொல்லுவார்கள் கேள்விகேட்பார்;கள் ஆகவே அது ஒரு சாத்தியமான முறையல்ல ஒரு அரசியல் தீர்வை முன்வைத்து இருதரப்பினரதும் சம்மதத்துடன் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி அதை பாதுகாப்பதற்கு உறுதியான உத்தரவாதத்தை கொடுக்கின்ற நிலைமையை ஏற்படுத்தவேண்டும் ஆயுதங்கள் ஒரு பெரிய காரியமென்பதற்காக ஆயுதங்களை தாம் வைத்திருக்கவில்லை என்பதை எனக்கு எத்தனையோ முறை அவர்கள் சொல்லியிருக்கின்றனர் மக்களைப்பாதுகாத்து உரிமையை நிலைநாட்டுவதற்காகத்தான் ஆயுதங்களை வைத்திருக்கின்றோம் உரிமைகளை தருகின்றபோது ஆயுதங்களை எறிந்துவிடுவோம் என்று எத்தனையோ தடைவ எனக்கு உறுதிப்படுத்தி தெரிவித்திருக்கின்றனர் அன்டன் பாலசிங்கத்திடம் பலதடவைகள் வினவிய போது கூட இதனைத்தெரிவித்திருக்கின்றார் என்னைப்பொறுத்தவரை அவர்கள் என்றுமே ஆயுதங்களை வைத்திருக்கப்போவதல்ல உண்மையாகவே ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு யுத்தநிறுத்தம் ஒருசக்திவாய்ந்த இடைநிலையாளர்களுடைய உதவியோடு அதை செய்துமுடிக்க வேண்டும் அதைச்செய்துமுடித்தால் வெற்றிகரமாகபேச்சுவார்த்தையைத்தொடங்கலாம் முடிக்கலாம் அப்படியானநிலையில் ஆயுதங்களெல்லாம் தானாக போய்விடும் ஆயுதங்கள் தேவையில்லாத இடத்தில் ஏன் ஆயுதங்களை வைத்திருக்கப்போகின்றனர் மக்களின் உரிமைகளையும் அரசியல் வாழ்வையும் முறைப்படுத்துவதற்காக பாதுகாப்பதற்காக அவர்கள் எத்தனையோ முறைகளில் அரசியல்ரீதியாக அணுகுமுறைகளை மேற்கொண்டதை நாங்கள் வரலாற்றில் பார்க்கின்றோம் எத்தனையோ முறை சாத்வீக முறையில் செய்திருக்கின்றனர் ஆனால் சகல தடவைகளிலும் ஆயுதங்கள் கொண்டு அது தடுத்து நிறுத்தப்பட்டது ஆயுதம் தாங்க வேண்டிய நிலை ஏன் உருவானதென்பதை நாங்கள் சரித்திரத்தில் பார்கலாம் ஒருநோக்கத்திற்காக ஆயுதங்களைத்தூக்கினவர்கள் அந்த நோக்கத்தை அடைந்ததும் அதனை விட்டுவிடுவார்கள் இதை நான் சொல்லவில்லை நான் கேட்;டபோதெல்லாம் அவர்களே இதனைத்திருப்பிதிருப்பி கூறியுள்ளனர் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கான உண்மையான அடிப்படையை ஏற்படுத்தி இதயசுத்தியுடன் இருபகுதியினரும் அதில் ஈடுபட்டு பேச்சுவார்த்தையை முன்னெடுத்தால் இந்தப்பிரச்சனை முடியும் மக்கள் படும் துன்பங்கள் குறையும் நாடு மலர்ச்சியடையும்

No comments:

Post a Comment