Wednesday, March 25, 2009

பருவமழை இடம்பெயர்ந்தமக்களுக்கான எமது பணிகளை மேலும் சிக்கலாக்கிவிட்டுள்ளது

-செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் பேச்சாளர் அலெக்ஸாண்ட்ரா மெடியேவிக்
கேள்வி :ஒமந்தைச்சோதனைச்சாவடியை ஒட்டுசுட்டானுக்கு நகர்த்துமாறு பாதுகாப்புச்செயலாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?

பதில் :இதனை என்னால் உறுதிப்படுதவோ அன்றேல் நிராகரிக்கவோ முடியாது ஏனெனில் அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளுடனான எமது இரகசிய கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக அமைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்

கேள்வி :வன்னியில் இடம்பெயர்ந்த நிலையில் வாழும் மக்களுக்காக தமிழ் நாட்டில் சேகரிக்கப்பட்ட செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் மூலமாக மக்களிடம் கையளிக்கப்படும் என தமிழ் நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது எனினும் இலங்கை அரசாங்கமே இதனை நேரில் கையளிக்கும் என ஜனாதிபதி புதுடில்லியில் வைத்து தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன இதன் உண்மையான நிலையாது ?

பதில் :வன்னியில் இடம்பெயர்ந்துள்ளமக்களுக்காகவும் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்காகவும் நிவாரணப்பபொருட்களை விநியோகிப்பதற்காக இந்திய அதிகாரிகள் செஞ்சிலுவை சர்வதேச குழுவை அண்மையில் அணுகியிருந்தனர் இலங்கையை வந்தடையும் இந்திய நிவாரணப்பொருட்கள் வரும் நாட்களில் இலங்கையிலுள்ள செஞ்சிலுவை சர்வதேசக்குழு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படும் என நாம் நினைக்கின்றோம் இந்தப்பொருட்களின் பின்னர் வன்னியில் விநியோகிக்கப்படும் நிவாரணப்பொருட்கள் தமிழ்நாட்டில் பொதியிடப்படுவதற்கு முன்னதாக செஞ்சிலுவை சர்வதேக்குழுவின் பிரதிநிதிகள் அதனைப்பார்வையிட்டுள்ளனர் அந்தப்பொருட்கள் நல்லதரமானவையென்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இருப்பதையும் நாம் உறுதிசெய்துள்ளோம் மிக முக்கியமாக அந்தப்பொருட்கள் வன்னியிலுள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்புடையதாக இருப்பதை நாம் உறுதிசெய்துள்ளோம் அந்தவகையில் எமது பணியாளர்கள் தேவையுடைய பொதுமக்களுக்கு நேரடியாக இந்த பொருட்களை கையளிப்பார்கள் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கும் வன்னியிலுள்ள் குடியிருப்பாளர்களுக்கும் இந்தநிவாரணப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும் .

கேள்வி :வன்னியிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு பிரசன்னமாகியுள்ள ஒரே அமைப்பாக செஞ்சிலுவை சர்வதேசக்குழு காணப்படுகின்றது வன்னியில் தற்போதைய நிலையில் நீங்கள் ஆற்றிவருகின்ற பங்குபணிபற்றிக்குறிப்பிடுங்கள் ?

பதில் :செஞ்சிலுவைச்சர்வதேச குழுவே தற்போது வன்னியில் நிரந்தரமாக நிலைகொண்டுள்ள ஒரேயொரு சர்வதேச மனிதாபிமான நிறுவனமாகும் வன்னியில் நாம் கடந்தபல ஆண்டுகாலமாக பணியாற்றிவருகின்றோம் தற்போது எமது நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பிலிருந்து முன்னெடுத்துவருகின்றோம் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுடன் நெருக்கமாக இருந்து மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு துணைபுரிவது எமது நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகவுள்ளது மக்களின் அடிப்படைத்தேவைகள் ஈடுசெய்வதற்கு உதவிசெய்வதுடன் நெருக்கடியான நிலையின் போது மக்களுக்கு போசாக்கு பொருட்கள் மற்றும் வீட்டுப்பாவனைப்பொருட்கள் மற்றும் நுளம்புவலைகள் போன்றவற்றை விநியோகித்து அவர்களின் இடம்பெயர்வின் கஷ்டமான காலப்பகுதியில் உதவிசெய்துவருகின்றோம் அத்தோடு குடியிருப்புக்களை அமைத்துக்கொடுத்தல் நீர் கழிப்படவசதிகள் என்பன தொடர்பாகவும் நாம் உதவிபுரிந்துவருகின்றோம் இலங்கையின் ஏனைய பாகங்களில் செயற்படுவதைப்போன்றே நாம் தொடர்ந்தும் பாதுகாப்புநல விடயங்களிலும் பணியாற்றிவருறோம் ஏனெனில் பாதுகாப்பு விடயமும் ஆயுதமோதல்களில் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளை வழங்குவதும் செஞ்சிலுவைச்சர்வதேசக்குழுவின் ஆணையில் அடங்கியுள்ளது



கேள்வி : வன்னியில் பருவமழை ஆரம்பித்துவிட்டதாக சுட்டிக்காட்டப்படும் நிலையில் அங்குள்ள மக்கள் எவ்வாறான இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர் ?

பதில் :வன்னியில் பருவமழை காரணமாக குடியிருப்புக்களுக்கான தேவை பெருமளமாக அதிகரித்திருப்பதை நாம் கண்ணுற்றுள்ளோம் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 750ற்கும் அதிகமான அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான தற்காலிக குடியிருப்புக்கான பொருட்களை நாம் வழங்கியுள்ளோம் அதற்கு மேலதீகமாக ஏறத்தாழ 18000 தாவார விரிப்புக்கள் இவற்றை பல்வேறுவகைகளில் பாவனைக்குட்படுத்த முடியும்

கேள்வி: தாவார விரிப்புகளை வன்னிக்கு எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வந்தன அப்படி தடையுள்ளதா ?

பதில் :இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான எமது உதவிநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதுமான கையிருப்புக்களுள்ளன தற்போது வன்னியில் உள்ளன

கேள்வி : வன்னியில் சுகாதார சேவை எவ்வாறு காணப்படுகின்றது ? செஞ்சிலுவை சர்வதேசக்குழுவின் இந்தவிடயத்தில் எத்தகைய பங்களிப்பை ஆற்றுகின்றது ?

பதில் :வன்னியில் தற்போது மக்கள் மட்டும் இடம்பெயர்ந்திருக்கவில்லை மாறாக மக்களுடன் பல சுகாதாரக்கட்டமைப்புக்களுமே இடம்பெயர்க்கப்பட்டுள்ளன கடினமான சூழ்நிலையில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அங்குள்ளவர்கள் பணியாற்றுதற்கு ஏற்புடைய ஆற்றலைக்கொண்டுள்ளனர் வன்னியில் இயங்கும் சுகாதாரக்கட்டமைப்புடன் இணைந்து செஞ்சிலுவை சர்வதேசக்குழுவானது தற்போது அங்குள்ள நிலைமைகளை அவதானித்துவருகின்றது ஒக்டோபர் மாதத்தில் 15 மலேரியா நோயர்கள்கள் பதிவுசெய்யப்பட்டதான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அந்தவகையில் பருவமழையின் வருகையுடன் நுளம்புடன் தொடர்புடைய நோய்களின் பரவுகை தொடர்பாக நாம் மிகவும் விழிப்புடன் இருக்கின்றோம் அதுமட்டுமன்றி சுகாதாரப்பிரிவினருடன் நாம் தினந்தோறும் தகவல்களைப்பரிமாறிக்கொண்டிருக்கின்றோம் அவர்களுக்கு உதவுவதற்கு நாம் அர்ப்பணிப்புக்கொண்டுள்ளோம் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக நாம் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்

கேள்வி : இவ்வருடத்தில் ஒமந்தைச்சோதனைச்சாவடியை பயன்படுத்திய மக்கள் தொடர்பான தரவுகள் ஏதேனும் உள்ளதா?

பதில் : இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 270 000 அதிகமான பொதுமக்கள் இருபக்கங்களிலிருந்துமாக ஒமந்தை கடவையை பயன்படுத்தியுள்ளனர் பொதுமக்கள் பணியின் நிமித்தமாகவோ அன்றேல் மருத்துவ தேவைகளின்நிமித்தமாகவோ அன்றேல் குடும்ப அங்கத்தவர்களைக்காண்பதற்காகவோ ஒமந்தைக்கடவையை பயன்படுத்தியுள்ளனர் ஒக்டோபர் மாதத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒமந்தைக்கடவையை பயன்படுத்தியுள்ளனர் .இதில் வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு80ற்கு மேற்பட்ட அம்புலன்ஸ்களில் வந்த 530ற்குமேற்பட்ட நோயாளர்களும் அடங்குவர்

கேள்வி : ஒமந்தைச்சோதனைச்சாவடி கடந்த வாரத்தில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் திறக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளதே எதற்காக இப்படி அறிவிப்புக்கள் வந்தன ?

பதில் :ஆயுதமோதல்காரணமாக நிலவுகின்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையைக்கருத்தில்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது நவம்பர் 14ம்திகதி எமது அலுவலகர்கள் ஒமந்தை கடவையில் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒமந்தை கடவையைப்பயன்படுத்துவதானது பொதுமக்களுக்கும் எமது அலுவலகர்ககளும் பாதுகாப்பானது என்ற உத்தரவாதங்களை அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து பெற்றுக்கொண்ட நிலையிலேயே இது சாத்தியமாகியுள்ளது ஒமந்தை கடவையை திறக்கவோ அன்றேல் மூடுவதற்கோ உரித்தான ஆணையை செஞ்சிலுவைச்சர்வதேசக் குழு கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக்கொள்வது பிரதானமானது மாறாக இருதரப்பினரும் இணக்கம் கண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே ஒமந்தைக்கடவைதிறக்கப்படுகின்றது தற்போதைய நிலையில் தற்போதைய இணக்கப்பாட்டைப்பொறுத்தவரையில் இருதரப்பினருக்குமிடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஒமந்தைச்கடவை 4மணித்தியாலங்கள் திறக்கப்படும்



கேள்வி : இந்தக்கஷ்டமான காலகட்டத்தில் செஞ்சிலுவைச்சர்வதேசக்குழு அதன் பணிகளை முன்னெடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் யாது ?


பதில் : எமது பணியைப்பொறுத்தவரை பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன மக்களுக்கு உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கையை பருவமழையானது மேலும் சிக்கலாக்கிவிட்டுள்ளது சிலவீதிகள் இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலைகாணப்படுகின்றமையால் உதவிப்பொருட்களை கொண்டுவருவது கடினமாகியுள்ளது மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் ஒட்டுமொத்த பாதுகாப்பற்ற சூழ்நிலையும் அங்குள்ள பொதுமக்களுக்கும் எமது பணியாளர்களுக்கும் பெருங்கரிசனையை ஏற்படுத்திவிட்டுள்ளது இருந்தபோதிலும் மிகவும் அவசியமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்ற எம்மால் முடிந்துள்ளது

No comments:

Post a Comment