Friday, March 27, 2009

இலங்கையில் போரை இந்தியா எந்தவிதத்திலும் ஆதரிக்கவில்லை

பேராசிரியர் பி சகாதேவன்



1)இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை பரந்துபட்டரீதியில் பார்க்கவேண்டும்

2)தேர்தல்கள் ஜனநாயத்தின் அடிப்படை என்கிறபோது இந்தியா எவ்வாறு அதற்கு தடங்கலாக இருக்கமுடியும்

3)13வது திருத்தச்சட்டம் தீர்வுவிடயத்தில் முடிவாக இருக்குமானால் அது சந்தோசமான விடயமில்லை
4) இலங்கை இராணுவத்திற்கு நாசகார ஆயுதங்களை இந்தியாவழங்கவில்லை

5) மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையில் நிகழ்வதை இந்தியா அங்கீகரிக்கவில்லை


இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைமீறல்கள் விடயத்தில் இந்தியா பகிரங்க அறிக்கைகளை விடுத்து உலகத்திற்கு தெரியப்படுத்தாவிடினும் இராஜதந்திர ரீதியில் அதன் கரிசனைகளை வெளிப்படுத்திவருகின்றது என புதுடில்லி ஜவஹர்லால் நேருபல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தெற்கு மத்தி தென்கிழக்காசியா மற்றும் தென்மேற்கு பசுபிக் கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவருமான பேராசிரியர் பி சகாதேவன் தெரிவித்துள்ளார்

தெற்காசியாவில் பன்மைவாதம் தொடர்பான பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்புவந்திருந்த நிலையில் பேராசிரியர் எமக்களித்த பிரத்தியேக நேர்காணலின் போது அவர் அளித்த பதில்கள்










கேள்வி : இந்தியா தற்போது இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது?

பதில் : இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்றால் அதை வெளிப்படையாகவே சொல்லலாம் அதுவந்து இந்தியா எந்தவிதத்திலும் சரி போரை விரும்பவில்லை இதை இங்குள்ள அரசாங்கத்திற்கு பலதடவை சொல்லியிருக்கின்றது சொல்லியும் பிரயோஜனம் இல்லாமல் ஆகிவிட்டது அதைவைத்து பார்க்கபோனால் இந்தியாவினுடைய ஒருமுக்கிய குறிக்கோள் என்னவென்றால் சமாதானபேச்சுவார்த்தையின் மூலம் ஒரு அமைதிதிரும்பவேண்டும் அமைதிதிரும்பவேண்டும் என்றால் அதற்கு ஒரு உடன்படிக்கை வரவேண்டும் அப்படிப்பட்ட ஒருபயனுள்ள ஒருவிளைவைத்தான் இந்தியாவிரும்புகின்றது அப்படிப்பட்ட ஒருமுடிவைத்தான் இந்தியாவிரும்புகின்றது போரை எந்த விதத்திலும் இந்தியா ஆதரிக்கவில்லை


கேள்வி: ஆனபோதிலும் இலங்கை இராணுவத்தளபதி அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக செய்திகள் இலங்கையின் உள்ளுர் ஊடகங்களில் தகவல்வெளியாகியிருந்தன இதனை எப்படிப்பார்க்கின்றீர்கள்

பதில் :


உண்மையாகவே இலங்கையின் இராணுவத்தளபதி இந்தியாவந்த போது எத்தனைசெய்தித்தாள்களில் அவருடைய விஜயத்தைப்பற்றி எழுதினார்கள் அந்தச்செய்திகள் வெளிவந்தது என்று பார்க்கப்போனால் எந்தப்பேப்பரிலும் அதிகமாக வர்ல்ல ரொம்ப சின்ன சின்ன ஒன்றோ இரண்டோ பெரிய முக்கியம் இல்லாத செய்தித்தாள்களில் அவருடைய விசயங்கள் வந்தது அதுவும் ரொம்ப விபரமாக இல்ல அது ஒருபக்கம் இரண்டாவதாக இவருடைய விஜயத்தை வந்து இராணுவ அடிப்படையில் பார்க்கவேண்டும் இரண்டு நாடுகளுடைய இராணுவங்கள் இருக்கின்றதென்றால் இரண்டு நாடுகளின் இராணுவத்தளபதிகளுக்கிடையில் சில உறவுகளுண்டு அந்த உறவுகளைவைத்துவந்து இந்தியாவின் இராணுவத்தளபதி அண்டைநாடுகளுடைய இராணுவத்தளபதியோ இல்ல மற்ற வேறுநாடுகளுடைய இராணுவத்தளபதியைக் கூப்பிடுகின்றது சகஜமானது இது ஒரு பெரிய காரியம் கிடையாது ஆனால் இலங்iயைப்பொறுத்தவரை இலங்கை தளபதி வரும் போது அதற்கு பெரிய அரசியல் முக்கியத்துவம் இந்த நாட்டில் இருக்கின்றது ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் இந்தியாவைப்பொறுத்தவரையில் இவர் வந்தார் இவர் வந்தபோது காஷ்மீருக்கு கொண்டு போனார்கள் அந்த நிலைமைகளை காண்பித்தனர் மிசோரம் போனாங்க இதெல்லாம் இந்தியாவிற்கு ஒரு பெரிய விடயம் கிடையாது ஆம் இலங்கையை எடுத்துக்கொண்டால் இதுஒரு பெரிய விடயம் ஏனென்றால் இப்பொழுதைய நிலைவந்து அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை உண்டுபண்ணியுள்ளது இங்கே நடக்கின்ற சம்பவங்கள் வந்து ஒரு முக்கியத்துவத்தை உண்டு பண்ணியிருக்கின்றது அரசாங்கத்தரப்பிலேயோ அரசியல் ரீதியான தரப்பிலேயோ பார்க்கபோனால் இந்த விஜயத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் இந்திய அரசாங்கத்தைப்பொறுத்தவரை ஏதேனும் ஒரு நடவடிக்கை ஏதேனும் ஒரு தீர்மானம் கொண்டுவரவேண்டுமேயானால் அது ஒரு அரசியல் தலைவர்கள் எடுக்கின்ற ஒன்றாக இருக்குமே ஒழிய இராணுரீதியாக எடுக்கின்ற ஒரு தீர்மானம் கிடையாது ஆக மொத்தத்தில் என்னைப்பொறுத்தவரையில் நான் அவருடைய விஜயத்தை எப்படிப்பார்க்கின்றேன் என்றால் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க அவசியமில்லை

செய்தி : இலங்கை அரசாங்கத்தினால் அனைத்துக்கட்சி குழுவினூடாக தீர்வு திட்டமாக சமர்பிக்கப்பட்டுள்ள தீர் 13வது அரசியல்யாப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தீர்வை தமிழ்மக்களின் அபிலாஷைகளை ப+ர்த்தி செய்யப்போதுமான ஒரு தீர்வுத்திட்டமாக இந்தியா கருதுகின்றதா ?

பதில் :
இந்தியாவின் நிலைமை ஒரு இக்கட்டான நிலைமை இலங்கையில் ஒரு பக்கம் பார்த்தால் போர் நடக்கின்றது மறுபக்கம் பார்த்தால் அரசியல் ரீதியான முன்னெடுப்பப்புக்கள் இடம்பெறுகின்றன அரசியல் ரீதியான செயற்பாடுகள் அனைத்து சமயங்களிலும் நல்லதாக முடியும் எனக்கூறிவிடவும் முடியாது போர் ஒருபுறம் அரசியல் முன்னெடுப்புக்கள் மறுபுறம் என்றிருக்க இரண்டுக்கும் இடையே இந்தியாவின் எண்ணோட்டம் எவ்வாறு இருக்கின்றதென்றால் ஏதாவது ஒரு செயல் நடக்கட்டும் இங்கவுள்ள அரசாங்கம் வந்து இந்தவொரு சூழ்நிலையில் வந்து இந்த மாதிரியான ஒரு செயல்பாட்டை தொடங்குமேயானால் 13வது அரசியல்யாப்பு திருத்தத்தைக்கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தலாம் அப்படி ஒரு யோசனையை வைக்கின்றார்களேயானால் இந்தியா இதனைவேண்டாம் என்று சொன்னால் ரொம்ப அசிங்கமான விடயம் இரண்டாவது விடயம் இந்த 13வது திருத்தச்சட்டம் இலங்கை தமிழ்மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்யப்போகின்றதா இல்லை அவர்களின் அபிலாஷைகளை குறைவாகவே தீர்க்கப்போகின்றதா அப்படி ஒரு விவாதம் வரும் போது அதில் ரொம்ப வித்தியாசமான கருத்துநிலைகள் வரலாம் ஆனால் அரசாங்கத்தைப்பொறுத்தவரையில் எதுவும் நடக்காத நிலையில் இப்படியொன்று நடக்கின்றது என்றால் ஒரு முயற்சியை தொடங்குவதற்காக அது ஒரு ஆரம்பமாக இருக்க முடியும் மற்றுமொரு கட்டத்தில் வேறு பெரிதாக அமையலாம் என்பதே இந்தியாவின் எண்ணோட்டமாக இருக்கின்றது அதனால் தான் இந்திய அரசாங்கம் இதனை வரவேற்றிருக்கின்றது என்னைப்பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் 13வது அரசியல்யாப்பு திருத்தச்சட்டம் இருபது வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவம் அந்த இருபது வருடங்களில் ஏகப்பட்ட ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன ஆனால் இப்பொழுது 13வது திருத்தச்சட்டம் வந்து மாகாணசபை முறைமை அதிகாரப்பரவலாக்கம் என்பன நல்ல முறையில் நடக்கவில்லை அதனை நல்ல முறையில் இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை அந்த ஒரு தருணத்தில் வந்து என்னுடைய அபிப்பராயம் என்னவென்றால் முன்னேற்றகரமான அதிகாரப்பகிர்வு கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும் கடந்தகாலத்தில் நடைமுறையில் செயற்படுத்தமுடியாது போன திட்டத்தை செய்கின்றது என்பது வந்து சங்கடமான ஒரு விடயம் தான் ஆனால் இதனை ஒரு முடிவாகவன்றி ஒரு ஆரம்பமாக இருந்து இதற்கு பின்னால் நல்ல விடயங்கள் திட்டங்கள் வருமேயென்றால் பரவாயில்லை வரவேற்கலாம் அப்படி வரவேண்டும் வரவில்லை என்றால் 13வது திருத்தச்சட்டத்துடனேயே நிறுத்திவிடுவோம் இதற்கு மேல் ஒன்றும் நடக்காது இதுதான் இறுதியானது என்று சொல்லிவிட்டால் அதுவந்து ரொம்ப சந்தோசமான விடயமில்லை ஏனென்றால் 13வது அரசியல் அமைப்பு திருத்தம் என்ன கொடுக்கின்றதென்றால் இதற்கு முன்னாடியிருந்த அரசாங்கங்கள் என்ன கொடுக்க தயாராக இருந்தனவோ அதைவிட குறைவாகக்கொடுக்கின்றது அதனால் தான் பிரச்சனை இந்திய அரசாங்கத்தின் நிலை வேறாக இருந்தாலும் சரி நம்புடைய கல்வியில் கருத்தென்று வருகின்றபோது மற்றப்பார்வையில் நாம் பார்க்கலாம் ஆக மொத்தம் இந்தியா ஏன் வரவேற்கின்றதென்றால் வேறு எதுவும் நடக்கவில்லை இங்கே இதாவது நடக்கட்டுமே என்பதற்கேயாகும்


கேள்வி: இந்தியா ஆயுதவன்முறைகளை விரும்பாத நாடு எனினும் கிழக்கிலே நடைபெற்ற தேர்தல்களில் ஆயுதங்களை இன்னமுமே கையளிக்காத குழுவினர் பங்கேற்ற தேர்தல்களை இந்தியா எப்படிப்பார்க்கின்றது?

தேர்தல் என்று வரும் போது அது ஒரு ஜனநாயக செயற்பாடு அதனை ஜனநாயக முன்னெடுப்பின் அங்கமாகவே பார்க்கவேண்டும் பிள்ளையான் குழு கருணா குழு இவர்களை இந்தியா எந்தநிலையிலும் அங்கீகரித்ததாகவில்லை அங்கீகரிக்கவுமில்லை அங்கீகரிக்கவும் மாட்டாது ஆனால் தேர்தல் என்பது ஒரு அரசியல் நடைமுறையின் ஒர் அங்கம் அப்படியென்று வரும் போது கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலை இந்தியா ஏன் எதிர்க்க வேண்டும் அதனால் தான் வரவேற்கின்றது அதை ஒரு சாதகமான பக்கமாகவே நாம் எடுக்கவேண்டும் எந்த நாட்டிலேயும் எந்த பகுதிலேயும் ஒரு தேர்தல் நடக்கின்றதென்றால் அது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் அப்படித்தான் இந்தியா பார்க்கின்றது அதனால் தான் இந்தியா வரவேற்கின்றது ஆனால் அப்படி வரவேற்கின்ற நிலையில் வந்து இந்த குழுவையோ அந்த குழுவையோ இந்தியா அங்கீகரிக்கின்றது அதை எதிர்க்கின்றது இதை எதிர்க்கின்றது எனப்பார்ப்பது பாதகமான முறையில் பார்ப்பதாக அமையும் அந்தவகையில் இந்தியா இவர்களையெல்லாம் நிச்சயமாக இந்தியா அங்கீகரிப்பதாக அமையாது

கேள்வி: கிழக்கிலே மாகாணசபைத்தேர்தல்களை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது ஆனால் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைந்த வடக்குகிழக்கு மாகாணங்கள் என்பது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது தற்போது அது பிரிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கிழக்குமாகாணத்திற்கு மட்டும் தனியே தேர்தல்கள் நடத்தப்படுவதை இந்தியா எப்படிப்பார்க்கின்றது ?

இதுவரைக்கும் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று எனக்கு தெரியவில்லை ஆனால் அடிப்படைப்பிரச்சனை என்னவென்றால் அது மாகாணங்கள் பிரிக்கப்பட்டவிடயமாகும் அதில்தான் நாம் பார்க்கவேண்டும் தேர்தல் நடக்கப்போகிறதை அடிப்படையாக வைத்துநாம் பார்க்கமுடியாது இந்தியாவின் நிலை எப்படியிருக்க வேண்டும் என்றால் இந்தியாவந்து மாகாணங்கள் பிரிக்கப்பட்டதை விரும்புகின்றதா இல்லையா என்பதையே இதில் கருத்தில்கொள்ளவேண்டும் அதைவைத்துபார்க்கபோனால் இந்தியா மாகாணங்கள் பிரிக்கப்பட்டதை இந்தியா எதிர்க்கவில்லை ஏனென்றால் இந்திய அரசாங்கத்தின் நிலை என்னவென்றால் இது ஒரு நீதிமன்ற தீர்ப்பு நீதிமன்ற ஒரு தீர்ப்பை வழங்கியது அதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன அதைத்தவிர்க்க அரசியல் ரீதியான ஒரு நடவடிக்கையை இங்குள்ள அரசாங்கம் எடுக்கவில்லை அதைசெயல்படுத்த இந்தியா ஒரு அழுத்தம் கொடுக்கவில்லை அப்படியொரு முடிவிற்கு நாம் வரவேண்டும் ஏனென்றால் இந்தியா இலங்கை ஒப்பந்தம் படி மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டபோதும் நிரந்தரமான இணைப்பு நடைபெறவேண்டுமேயானால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் பல்வேறு காரணங்களினால் அதைச்செய்யமுடியவில்லை ஆகமொத்தத்தில் கிழக்கு மாகாணசபைத்தேர்தல் நடக்கப்போகின்றது அதை இந்தியா எப்படிப்பார்க்கும் என்பதைவிட மாகாணங்கள் பிரிக்கப்பட்டதை இந்தியா விரும்புகின்றதா அதற்கு இந்தியா என்னசெய்யப்பபோகின்றது என்றுதான் நாம் பார்க்கவேண்டும் அதைவைத்து பார்க்கபோனால் இந்தியாவின் நிலை இலங்கை அரசாங்கத்தினுடைய நிலையை ஒத்ததாகவுள்ளது ஏனென்றால் இது ஒரு நீதிமன்ற தீர்ப்பு அயல்நாடுவந்து இங்கு வழங்கப்படும் நீதிமன்றத்தீர்;ப்பை விமர்சிக்குமேயானால் சில பாதகமான விளைவுகள் வரலாம் அதனைவைத்துதான் இந்திய அரசாங்கத்தின் நிலை தற்போதுள்ளது

கேள்வி : கிழக்கு மாகாணசபைத்தேர்தல்களை இரத்துச்செய்வதற்கு இந்தியா செயற்படவேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் இதற்கு இந்தியா எவ்வாறான பிரதிபலிப்பை காண்பிக்கும் நீங்கள் எங்ஙனம் பார்க்கின்றீர்கள் ?

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளை இந்தியா அனுசரிக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும் ஏனென்றால் தேர்தல் என்று வரும் போது இந்தியா அதற்கு ஒரு தடங்கலாக இருக்காது ஏனெனில் ஜனநாயகத்தின் அடிப்படையாக தேர்தலே அமைந்துள்ளது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளில் நியாயம் இருப்பினும் இல்லாவிட்டாலும் இந்தியா எப்படிப்பார்க்கின்றதென்றால் குறித்த ஒருபகுதியில் ஜனநாயகமயமாக்கல் நடைபெறவேண்டுமேயானால் தேர்தல் தேவையானது என்றே பார்க்கின்றது

கேள்வி : இந்தியா மீண்டும் வரலாற்றுத்தவறை மேற்கொள்வதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அண்மையில் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதுவிடயத்தில் இந்தியாவின் பதில் நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது ? பதில் :

எந்த நாடாக இருந்தாலும் அவை தத்தம் வரலாற்றை தெரிந்துவைத்துக்கொண்டுதான் செயற்பாடுகளை முன்னெடுப்பதுண்டு ஆனால் ஒன்று மட்டும் தற்பேர்து மிகவும் தெளிவாக கூறவேண்டும் இந்தியாவினுடைய இராணுவ உதவிகள் என்று வரும் போது எந்தவகையிலும் சரி இலங்கை இராணுவத்திற்கு எந்த இராணுவ உதவியும் செய்யவில்லை பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை அன்றி
நாசகாரமற்ற ஆயத (ழேn டுநவாயட) உதவிகளையே வழங்கிவருகின்றது ரேடார் கொடுக்கின்றது புலனாய்வுதகவல் பரிமாற்றம் போன்றவற்றையே மேற்கொள்கின்றது இந்தநிலையில் நாம் சிலவிடயங்களை திரிவுபடுத்திச்சொல்லக்கூடாது இராணுவரீதியில் எந்தவகையிலும் உதவிகளை இந்தியாசெய்யவில்லை அதைவைத்துப்பார்க்கபோனால் விடுதலைப்புலிகள் அறிக்கையானது இலங்கை இராணுவத்தளபதி இந்தியாசென்றிருந்ததை வைத்தே உருவாக்கப்பட்டது சில விசயங்களை ரொம்ப மிதமாகவே பார்க்கவேண்டும் என்பதே எனது உணர்வாகும்

கேள்வி: இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கைகளில் மாற்றம் தேவை என்று இந்திய கம்யுனிஸ்ற் கட்சியைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா அண்மையில் கூறியிருந்தார் இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கைகளில் மாற்றம் செய்யப்படும் சாத்தியமுள்ளதா ?

இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கையில் என்ன மாற்றம் வருகின்றதென்று எனக்குதெரியவில்லை ஆனால் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒருபிரச்சனையை வைத்துக்கொண்டு கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன ஆனால் இலங்கை விடயத்தில் இந்தியாவிற்கு ஒரு தர்மசங்கடமான நிலையில் தான் இந்தியா இருக்கின்றது அதைநாம் சிந்தித்துபார்க்கவேண்டும் சும்மா அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என்று கூறிவிட்டு ஒன்றும் நடக்காமல் போவதைவிட மிகவும் அவதானமிக்கதான நிலைப்பாட்டை எடுத்து இந்தியா பதிலளிக்க வேண்டும் என்று தான் இந்தியா இருக்கின்றது ஏனென்றால் இந்தியா எதையும் சிந்திக்காமல் எதேனும் தீர்மானத்தை எடுத்துவிட்டால் இங்கே இந்தியாவிற்கு எதிரான போக்குகள் அதிகரிக்கும் இந்தமாதிரியான நிலைகளை இந்தியா தவிர்த்துவருகின்றது அதுமிகவும் நியாயமான நிலைப்பாடுதானே ஒருகட்டத்தில் இலங்கைமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் அரசியல் தீர்வுவரவேண்டும் அது ஒரு அரசியல் செயற்பாடுமூலம் வரவேண்டும் போரென்பது இதற்கு ஒருதீர்வாக இருக்காது என்றே இந்தியா கருதுகின்றது இதற்கு அப்பாலே நேரடியாக அதைச்செய்ய இதைச்செய்ய வந்து கடைசியாக எல்லாமே குழப்பமாகும் நிலையை இந்தியா விரும்பவில்லை தற்போதைய நிலையில் இந்த விடயம் மிகவும் கடினமானதொன்றாகும் இலங்கையில் எதிர்க்கட்சிகள் உள்ளன இந்தியாவின் கரிசனைகள் நிறைய இருக்கின்றன இந்தியாவந்து எதேனும் பண்ணமுடியுமா என்ற கருத்துக்கள் உள்ளன இவை அனைத்தையுமே நீங்கள் அலசிப்பார்க்கவேண்டும் அதைவிட்டுவிட்டு இந்தியா வரவில்லை அதைச்செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் நாம் எந்தக்கட்டத்தையும் அடையமுடியாமற்போய்விடும்

கேள்வி : தீபேத் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற ஆதங்கங்கள் சில தரப்பில் இருக்கின்றன பர்மிய போராட்டங்களின் போதும் இந்தியாவின் பங்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை என்ற கருத்துக்கள் உள்ளன இதுபோன்றே மேற்சொன்ன நாடுகளை விட நெருங்கிய உறவைக்கொண்டுள்ள இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பிலும் இந்தியா ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை என்றும் இது தொடர்பாக அறிக்கையைத்தானும் விடுவதில்லை என்ற ஆதங்கங்கள் கணிசமான தரப்பினரால் வெளியிடப்பட்டிருக்கின்றன மனித உரிமை என்கிறபோது இந்தியாவின் நிலைப்பாடு எப்படியாக உள்ளது ?


பதில் : இதி;ல் இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம் ஒன்று வெளிப்படையாக அறிக்கைகளை விட்டு அது உலகத்திற்கு தெரிகின்ற மாதிரி பண்ணுவது இன்னொன்று இராஜதந்திர வழிகளுடாக விசயங்களைச்சொல்வதாகும் இது எங்களுக்கு பிடிக்கும் இது நல்லதல்;ல இது கெட்டதில்ல அப்படியென்று இரண்டுவிதமாக எடுத்துக்கொள்ளலாம் இந்தியாவின் அணுகுமுறை என்னவென்றால் அது இரண்டாவதாக சொன்ன அணுகுமுறையாகும் இராஜதந்திர ரீதியாக இந்தியா சில விடயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றது ஆனால் வெளிப்படையாக உங்களுக்கு எல்லாம் தெரியும்படியாக அறிக்கைகளை விடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்ததென்றால் கடைசியாக என்ன தேவையென்றால் இவற்றின் ஊடாக பயன்ஏதும் இருக்கின்றதா இப்படிச்செய்கின்றதனால என்ன பயன் இருக்கின்றது வெளிப்படையாகவே அறிக்கைகளை விட்டு இறுதியாக இங்கேவந்து இந்தியாவின் வகிபாகத்தையே ஏற்புடையதற்றதாகுமிடத்து அது யாருக்குமே நன்மைதராது அதனால் தான் நிறைய விசயங்களை இராஜதந்திர வழிகளுடாக இந்தியா செய்துவருகின்றது அப்படியிருக்கையில் இந்தியா மனித உரிமைமீறல்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறுவார்களே அது சரியா தவறா என எனக்கு தெரியவில்லை இதனை நாம் பரந்த பார்வையில் பார்க்க வேண்டும் என்றே நான் கருதுகின்றேன் இந்தமாதிரியான சம்பவங்களை இந்தியா அங்கீகரிக்கவில்லை அதற்கு உறுதுணையாக இருக்கவில்லை என்றே நான் கூறுகின்றேன் சில விடயங்களை சொல்கின்ற முறை முக்கியமானது அதை இந்தியாசெய்துகொண்டு இருக்கின்றது அண்டைநாட்டில் ஒரு மனித உரிமைமீறல் நடக்கின்றது என்றால் எந்த நாடுமே ஒரு ஜனநாயக நாடுமே அதை ஏற்றுக்கொள்ளமாட்டாது இந்தியா ஒரு ஜனநாயக நாடுஎன்ற வகையில் இங்கு நடக்கின்றவிடயங்களை அது அங்கீகரிக்கின்றதென நான் கருதவில்லை அதுவும் குறிப்பாக மனித உரிமை மீறல் விடயத்தில் அங்கீகரிக்கவில்லை

No comments:

Post a Comment