Tuesday, December 1, 2020

கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுத்தது உயர் நீதிமன்றம்!


கொவிட்-19  -கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதுதொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவற்றதாக கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படைஉரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மை நீதியரசர்களின் இணக்கப்பாட்டுடன் நிராகரிக்கப்பட்டது.

மனுக்கள் நேற்றும் இன்றும் ஆராயப்பட்டன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தீர்பபை வெளியிட்டார். சட்டமா அதிபர் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே விளக்கமளித்தார். 

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்கு வைரஸ் தொடர்ந்தும் பரவுவதை தடுக்கும் நோக்கிலேயே சுகாதார தரப்பினர் தீர்மானித்தை எடுத்திருப்பதாக தெரிவித்தார். கொவிட் பரவும் விதம் தொடர்பாக நிபுணர்கள் இதுவரை இறுதி முடிவுக்கு வரவில்லை. அவ்வாறான பின்னணியில் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களிலிருந்து வைரஸ் பரவுவதில்லையென மனுதாரர்கள் முன்வைத்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென தெரிவித்தார்.



கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரியைகள் நடைபெறும் விதம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியானதென்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் எவருடைய அடிப்படை உரிமையும் மீறப்படவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து சுகாதார நிபுணர்களுக்கு மாத்திரமே முடிவெடுக்க முடியுமென பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார். 

இடைத்தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன கொவிட் தொற்றிய சடலங்களை அடக்கம் செய்வதன் மூலம் மண் ஊடாக வைரஸ் பரவ முடியுமென தெரிவித்தார். அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து மூவர்அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர் குழு அனைத்து மனுக்களும் பெரும்பான்மை நீதியரசர்களின் இணக்கப்பாட்டுடன் நிராகரிக்கப்பதாக அறிவித்தார்.

No comments:

Post a Comment