Thursday, December 17, 2020

டொனால்ட் ட்ரம்பிற்கு பின்னர் கொரோனா தொற்றுக்கு இலக்கான உலகின் சக்திவாய்ந்த ஜனாதிபதி

 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நவம்பர் 3 தேர்தலுக்கு முன்பாக கொரோனா தொற்றுக்குள்ளானமை உலகில் மிகப்பெரும் செய்திகளில் ஒன்றாக பேசப்பட்டது. தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின நிரந்தர உறுப்புரிமையுள்ள ஐந்து நாடுகளில் ஒன்றான பிரான்ஸின் ஜனாதிபதிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்துஇ 42 வயதான இம்மானுவேல் மெக்ரோனுக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.


அவருக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதோடுஇ கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள போதிலும் உரிய வழிகாட்டல்களைப் பேணி அவர் தொடர்ந்தும் தனது கடமைகளில் ஈடுபட்டு வருவதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவலைத் தொடர்ந்துஇ முடக்கப்பட்டிருந்த பிரான்ஸில்இ கடந்த ஒன்றரை மாதங்களின் பின்னர்இ கடந்த செவ்வாய்க்கிழமை (15) முதல் இரவில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இம்மானுவல் மெக்ரோன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.


தற்போது வரை பிரான்சில் 24 இலட்சத்துக்கும் அதிகமானோர் (2,465,246) கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதோடுஇ உலகளாவிய ரீதியில் கொரோனா பரவிய 186 நாடுகளில் 5 ஆவது இடத்தில் பிரான்ஸ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எதிர்வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ஒட்டி ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளன.

No comments:

Post a Comment