Wednesday, December 30, 2020

இலங்கையில் மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி?




உலகில் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டநிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இலங்கையில் கொரோனா தடுப்பூசியை வழங்க எதிர்பார்ப்பதாக ஆரம்ப வைத்திய சேவை, தொற்றுநோய் மற்றும் Covid– 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கொரோனோ தடுப்பூசி முதன்முதலில் சுமார் 4 மில்லியன் மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது தயாரிக்கப்படுகின்ற தடுப்பூசிகளில் ஒன்றை உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு தேவையான அளவில் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினுடன் கலந்துரையாடிஇ நாட்டிற்கு பொருத்தமான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் ஆரம்ப வைத்திய சேவைஇ தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment