Tuesday, December 15, 2020

உயர் நீதிமன்றத் தீ : சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்ட கருத்துக்கள் புலப்படுத்தும் செய்தி என்ன?

 



இலங்கையின் உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ  இன்றையதினம்  மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களுக்கு வழிவகுத்தது. இந்த தீ பிற்பகல் 4.30 அளவில் பரவத்தொடங்கி பெரும் புகைமண்டலத்தை ஏற்படுத்தியபோதும் சில மணிநேரத்திற்குள்ளேயே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.

இத்தீவிபத்தில் நீதிமன்ற ஆவண களஞ்சியத்திற்கோ வழக்கு கோப்புகளுக்கோ எவ்வித சேதமுமில்லை என நீதியமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான கட்டடத்திற்கு புறம்பாக காணப்படும் கட்டடத்தின் கீழ் தளத்தில் சிதைவுற்ற பொருட்களை சேமித்து வைத்திருந்த இடத்திலேயே தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள 3 CID குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த தீ சம்பவத்தை அடுத்து  சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. 














No comments:

Post a Comment