Wednesday, December 23, 2020

புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல் என்ன?

 


பிரிட்டனில் வாழும் மில்லியன் கணக்கிலான மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஒன்று கூடாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் மீது பயணத் தடை விதித்திருப்பதற்கும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய ரக கொரோனா வைரஸ் எப்படி பிரிட்டனில் அதிகமாகப் பரவும் வைரஸ் ரகமாக மாறியது?

மற்ற ரக கொரோனா வைரஸை விட இந்த புதிய ரக கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவலாம் என அரசு ஆலோசகர்கள் நம்புகிறார்கள்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து நிறைய சந்தேகங்களும் நிறைய விடை தெரியாத கேள்விகளும் இருக்கின்றன. இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் பணிகள் எல்லாமே தொடக்க நிலையில் தான் இருக்கின்றன.

ஏன் இந்த புதிய ரக வைரஸ் கவலையளிக்கிறது?

மூன்று விஷயங்களால் இந்த புதிய ரக கொரோனா வைரஸ் கவனம் பெறுகிறது.


1. இந்த புதிய ரக கொரோனா வைரஸ், மற்ற ரக வைரஸ்களை விட அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது,


2. இந்த ரக வைரஸின் முக்கிய பகுதியில் மரபியல் மாற்றங்கள் நடந்திருக்கிறது.


3. இதில் சில மரபியல் மாற்றங்கள் முன்பே சோதனை கூடங்களில் காணப்பட்டன. புதிய ரக கொரோனா வைரஸில் காணப்படும் இந்த மாற்றங்களில்இ மனித செல்களை பாதிக்கும் தன்மை அதிகமாக இருக்கின்றன.


புதிய ரக கொரோனா வைரஸ், அதிகமாக பரவும் கொரோனா வைரஸ் ரகங்களில் ஒன்றாக மாற வாய்ப்பிருக்கிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் பரவுவதன் மூலம் இது சாத்தியமாகும். உதாரணத்துக்கு லண்டனில் சமீப காலம் வரைஇ இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் தான் நடைமுறையில் இருந்தன. இந்த நகரத்தில்இ புதிய ரக கொரோனா வைரஸ் பரவினால், அது எளிதில் பிரிட்டன் முழுக்க அதிகமாக பரவ வாய்ப்பிருக்கிறது.


இந்த புதிய ரக கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க, பிரிட்டனின் பல பகுதிகளிலும் நான்காம் கட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.


'பரவுவது புதிய ரக கொரோனா வைரஸ் தானா என்பதைக் கண்டுபிடிக்க, சோதனைக் கூடங்களில் பல பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். அதுவரை நீங்கள் வாரக் கணக்கிலும் மாதக் கணக்கிலும் காத்திருக்க விரும்புகிறீர்களா? முடிவுகளைத் தெரிந்து கொண்ட பின் புதிய ரக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் போகிறீர்களா? நிச்சயமாக இந்த சூழலில் இல்லை' என்கிறார் கோவிட் - 19 ஜீனாமிக்ஸ் யூ கே கன்சார்டியத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக் லோமன்.


புதிய ரக கொரோனா வைரஸ் எவ்வளவு வேகத்தில் பரவுகிறது?

இந்த புதிய ரக கொரோனா வைரஸ் கடந்த செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. லண்டன் நகரில் கடந்த நவம்பரில் சுமாராக 25 சதவீத கொரோனா நோயாளிகள் இந்த புதிய ரக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். டிசம்பர் மத்தியில் லண்டன் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில்இ மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள்இ இந்த புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மில்டன் கீன்ஸ் லைட் ஹவுஸ் பரிசோதனைக் கூடம் போன்ற சில சோதனைக் கூடங்களின் தரவுகளில் இந்த புதிய ரக கொரோனா வைரஸ் எப்படி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது என்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த புதிய கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பரவும் என கணிதவியளாலர்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற ரக கொரோனா வைரஸை விட இந்த புதிய ரக கொரோனா வைரஸ் சுமாராக 70 சதவீதம் கூடுதலாக பரவலாம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். இது ஆர் எண்களை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டார் ஜான்சன். ஆர் எண் என்பது ஒரு தொற்று நோயின் பரவலைக் குறிக்கும் அளவீடு.

லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த எரிக் வோல்ஸின் விளக்கக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிலும் இந்த 70 சதவீதம் என்கிற எண் இடம்பெற்றிருந்தது.

'புதிய ரக கொரோனா வைரஸ் பரவுவது குறித்து இப்போதே கருத்து வெளியிடுவது மிகவும் முன் கூட்டிக் கூறுவதாக அமையும். ஆனால் புதிய ரக கொரோனா வைரஸ் மற்ற எந்த ரக கொரோனா வைரஸை விடவும் அதிவேகமாகப் பரவுகிறது. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்' என என்னிடம் குறிப்பிட்டார் எரிக் வோல்ஸ்.

புதிய ரக கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பரவலாம் என்பதற்கு சரியான தரவுகள் இல்லை. புதிய ரக கொரோனா வைரஸ் 70 சதவீதத்தை விட மிக கூடுதலாகப் பரவலாம் என்றும் 70 சதவீதத்தை விட மிகக் குறைவாகவே புதிய ரக கொரோனா வைரஸ் பரவலாம் என்றும் விஞ்ஞானிகள் தங்களின் மாறுபட்ட கணிப்புகளை என்னிடம் கூறினார்கள். இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது இருப்பதை விட புதிய ரக கொரோனா வைரஸ் கூடுதலாகப் பரவுமா என்கிற கேள்வி விடையின்றி தொக்கி நிற்கிறது.

'புதிய ரக கொரோனா வைரஸ் அதிகமாக பரவுகிறதா என்பதைக் கூற பொதுவெளியில் இருக்கும் தகவல்கள் ரூ ஆதாரங்கள் போதுமானதாக இல்லை' என்கிறார் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் பேராசிரியர் ஜானதன் பால்.


No comments:

Post a Comment