அரசியல் என்றாலே தெற்காசியப்பிராந்தியத்தில் வயது முதிர்ந்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் வேளையில் இந்தியாவின் கேரளமாநிலத்தில் நம்பிக்கை அளிக்கும் முன்னுதாரணம் இடம்பெற்றுள்ளது.
கேரளா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் தொகுதி உறுப்பினராக ஆக தேர்வான ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது மாணவியை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்திருக்கிறது.
திருவனந்தபுரம் நகரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ஆர்யா ராஜேந்திரன். இவர், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக இருக்கிறார்.
இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 100 இடங்களில் 51 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
அங்கு 35 இடங்களுடன் எதிர்கட்சி வரிசையில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 இடங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளன. மாநகராட்சியில் நான்கு சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர்.



No comments:
Post a Comment