Tuesday, November 17, 2020

2001 விடுதலைப்புலிகள் செய்ததை 2021 பட்ஜட்டில் கொரோனா !



2021 ஆம் ஆண்டுக்கான (பட்ஜட்) வரவு செலவு திட்டத்தை பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ  இன்று (17) பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

Collective for Economic Democracy அமைப்பு 2021ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக கருத்துவெளியிடுகையில் , "இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது (economic growth) தற்போது எதிர்மறையாக வீழ்ச்சிப்பாதையில்  காணப்படுகின்றது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5 முதல் 10 சதவீதமான வீழ்ச்சியாக இது பெரும்பாலும் எதிர்வுகூறப்படுகின்றது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்துபார்க்கையில் இது இலங்கைக்கு இரண்டாவது எதிர்மறை வீழ்ச்சியாக அமைந்துள்ளது.2001ம் ஆண்டில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானநிலையத்தின் மீது விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதலொன்றை நடத்தியதையடுத்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் எதிர்மறையாக 1.5 சதவீதமாக காணப்பட்டது."என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை நாடு எதிர்நோக்கியுள்ள Covid – 19 தொற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தின் வருமான மார்க்கங்கள் பல தடைப்பட்டுள்ளதுடன், சுகாதார மற்றும் நலன்புரி விடயங்களுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிடுவதற்கு நேரிட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.

அடுத்த ஓராண்டு காலத்திற்கான அரசாங்கத்தின் செலவீனங்களை ஈடு செய்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீட்டு சட்டமூலமே வரவு செலவு திட்டம் எனப்படுகிறது.

பாராளுமன்றத்தில் சுமார் ஒன்றரை மாத காலத்திற்கு வரவு செலவு திட்டத்திற்கான செயற்பாடுகள் இடம்பெற வேண்டியுள்ளது.

இதன் முதலாவது நடவடிக்கையாக அரசாங்கத்தின் உத்தேச செலவு மதிப்பீடுகள் மற்றும் கடன் பெறும் கால எல்லை அடங்கிய நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச செலவு 2,678 பில்லியன் ரூபா என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த வருடத்தின் செலவுகளுடன் ஒப்பிடுகையில் 5.5 வீத அதிகரிப்பாகும்.



இந்த பணம் ஒவ்வொரு அமைச்சுகளினதும் திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்கப்படுகின்ற விதம் அதற்கான வருமானத்தை ஈட்டும் முறைமை அடங்கிய விரிவான வரவு செலவு திட்ட உரையையே நிதி அமைச்சர் இன்று பிற்பகல் சபையில் நிகழ்த்தவுள்ளார்.

இது வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவு திட்ட உரை என அழைக்கப்படுகிறது.

இதற்கான எதிர்வுகூறலாக அடுத்த வருடம் அரசாங்கத்தின் வரவு செலவு துண்டு விழும் தொகையை ஈடு செய்வதற்காக 2,900 பில்லியன் ரூபா வரை கடனை பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான அரச நிதி ஒதுக்கீட்டின்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளுக்கு போன்றே இராஜாங்க அமைச்சுகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகப்படியாக 355 பில்லியன் ரூபா இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, உள்ளக பாதுகாப்பு, உள்விவகார, இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்காக மேலதிகமாக 152 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்காக 271 பில்லியன் ரூபாவும் அதன் இராஜாங்க அமைச்சுக்காக 338 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டு பெருந்தெருக்கள் அமைச்சுக்காக 330 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 160 பில்லியன் ரூபாவாகும்.

ஔடதங்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சுக்கும் 61 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தியதன் பின்னர் நாளை தொடக்கம் 21 ஆம் திகதி வரை 4 நாட்கள் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதம் என்றழைக்கப்படுகின்ற மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரை 16 நாட்கள் நடைபெறவுள்ளது.

மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நிறைவில் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்று அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வரவுள்ளன.

Budget 2021: Why is it important and what will it tell us? 11 questions answered


The Collective for Economic Democracy has put in context the upcoming Budget and its implications, through a Pre-Budget Report. 

Why is this Budget significant?

It comes in a devastating pandemic-hit year. Sri Lanka’s economy was already heading to a precipice, with a massive external debt, draining foreign reserves, falling incomes and domestic demand. The direction this Budget takes will determine whether and how we can recover and revive our economy for our future
generations or put them at even greater risk.

What does our economy look like now?

It has been widely predicted that economic growth will be negative, a likely 5 – 10% of GDP contraction.

This is the second contraction since Independence. The first was in 2001, when the country experienced a contraction of 1.4%, following the Bandaranaike Airport Attack by the LTTE.

What are the options before the Government, while coping with the negative growth?

Broadly, one option is that the Government continues with its thrust on exports-driven development and Foreign Direct Investments. However, both FDIs and the global export market have been severely hit by the pandemic and show no sign of quick recovery. So, we need to see what the Government’s strategy is in this regard.

Two, the Government could pursue its stated goal of boosting domestic production. However, that would depend on the allocation of resources towards this objective. How much is the Government willing to invest and in what sectors is the key question.

What does enhancing domestic production entail?

It would entail substantially larger allocations to our rural economy which currently contributes 7% of GDP and has suffered years of neglect. It would need targeted allocations to agriculture, fisheries and livestock sectors, with specific policy interventions to put these allocations to good use swiftly.

It would also require providing necessary inputs such as seeds and fertilizers, value addition and marketing in order to ensure sustainable incomes for the rural sector.

How will the Government address the imports bill?

The Government is facing a problem with foreign exchange earnings with tourism incomes coming to a halt and remittances on the decline. Our imports have historically been double our export earnings. The total import bill is about USD 20 billion, of which USD 1.42 billion is food and beverage imports and USD 11.3 billion is intermediate goods. We will have to see how the Government plans to pay for these imports or reduce the imports through import substitution.

How can food security be ensured?

While Sri Lanka is almost self-sufficient in rice to possibly keep the population from starvation, other food imports from wheat to nutritious food items like seafood (USD 215 million), milk (USD 312 million), pulses (USD 138 million) are largely imported. The Government will have to decide if it is going to continue with imports or come up with a programme for sustainable local production of these nutritious food items.

What about falling incomes?

The pandemic has heightened unemployment and disrupted livelihoods across the country, in both rural areas and among urban working people, due to prolonged lockdowns and the collapse of many businesses. The Government’s strategy to addressing joblessness will be crucial even to maintain – if not increase – demand for locally produced goods. Cash transfers and subsidies can also contribute to demand creation for local products.

What can be done to ensure the survival of economically vulnerable populations?

The Government ought to be looking at expanding social welfare, so that those on our economic margins such as daily wage earners the most hit by the pandemic – are able to survive. We must therefore see how the Government safeguards vulnerable populations in a likely de-growth scenario. Would it alter its Samurdhi programme, or come up with a more holistic and comprehensive scheme, to address the significantly higher levels of projected poverty?

How can we understand the Government’s approach or intent from the Budget proposals?

The breakdown of the Budget will give us an indication. For instance, the budgets of successive governments over the last decade have reflected neoliberal policies, prioritising FIRE (Finance, Insurance and Real Estate) sectors for accumulation and growth, while neglecting the rural economy and agricultural
sector. Globally and in Sri Lanka, such economic policies led to “jobless growth,” that is GDP growth without jobs. Similar policies during times of such tremendous economic contraction, are likely to lead to massive loss of jobs.

The attention and priority to our vital rural economy in this Budget will show us if the Government is prepared to depart from the tried, tested and failed neoliberal policies – of both the UNP and the SLFP.

It will show us whether the Government, which claims to be focussed on agriculture and local production can actually walk the talk.

How do we identify the Government’s priorities?

While recurrent expenditure will have to be maintained for the functioning of state institutions and salaries, capital expenditure will provide an idea of the priorities and the direction set by the Government for the next few years. How much the Government is willing to allocate, for example, to agriculture
infrastructure, public health, education, transportation etc. will tell us how committed it is, to reviving and strengthening these sectors.

Another valuable indicator is how the Budget addresses shortfalls in state revenues. Given the constraints on achieving higher revenues from indirect and direct taxes with incomes and profits falling due to the shrinking economy, would the Government consider wealth or property taxes to raise revenues necessary for expenditure at this crucial juncture? Without such measures to increase revenues, the fiscal deficit and accumulated government debt in the next few years are likely to increase.

How does the Government plan to manage the external debt?

Given Sri Lanka’s negative rating of sovereign debt, rolling over past loans with market borrowings has become difficult. The Government may provide clues in the budget about future borrowings from bilateral and multilateral donors. There may also be measures to lease or sell strategic assets to external actors to increase foreign earnings and reserves.

To contact the Collective for Economic Democracy: Niyanthini Kadirgamar gracekadirgamar@gmail.com



No comments:

Post a Comment