Saturday, November 7, 2020

இலங்கையில் கொரோனா - தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில்

 


கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், முதலாவது பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாட்கள் கழிந்த பின்னர், இரண்டாவது பரிசோதனை நடத்தாமல், அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் போவதாக அவர் கூறினார்.

இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாதவர்கள் தத்தமது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.

தற்போதைய தொற்றுப் பரம்பல் நாளுக்கு நாள் மாறி வருவதால், மக்களின் வாழ்க்கை முறையை பேணும் வழிமுறைகள் கருதி சுகாதார அமைச்சு நான்காவது எச்சரிக்கை மட்டத்தை பிரகடனம் செய்துள்ளது. தொற்றுப் பரம்பல் நீண்ட காலம் நீடிக்கலாம் என சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா தெரிவித்தார்.

இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது. சில இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும், ஏனைய பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாழ்க்கையையும், தொழில்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்

முல்லேரியா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரட்ன கருத்து வெளியிடுகையில், இங்குள்ள பீசீஆர் கருவிகள் பழுது பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இங்கு நாளாந்தாம் சுமார் ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.


No comments:

Post a Comment