Tuesday, November 24, 2020

இலங்கையில் ஒன்லைன் வழி கல்வி முற்றுமுழுதாக தோல்வி ?

 




கொரோனா வைரஸ் உலகளாவிய  தொற்றுநோய் காலத்தில் இலங்கையில் ஒன்லைன் முறையில் முன்னெடுக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் முற்றுமுழுதாக தோல்விகண்டுள்ளதுடன் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கும் வழிகோலியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அனேகமாக  மாணவர்களும் பெற்றோர்களும் இந்த சாதனங்களுக்கு பழக்கப்பட்டிருக்கவில்லை என ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். 

நாட்டின் பலபகுதிகளிலும் மொபைல் சிக்னல் மிகவும் குறைவாக இருப்பது மட்டுமன்றி டேட்டா பொதிகள் பற்றாக்குறையாகவும் அதிக விலைகொண்டனவாகவும் அமைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டினார். 

மேல் மாகாணத்தில் 50% மானோரும் கிழக்கு மாகாணத்தில் 30% மானோரும் ஏனைய மாகாணங்களில்  20% முதல் 40% வரையானோருமே ஒன்லைன் மூலம் கல்விகற்கும் வசதிகளைக் கொண்டுள்ளனர். எந்தவிதமான வசதிகள் இல்லாதோரும் இருக்கவே செய்கின்றனர். 

இந்த கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை தொலைக்காட்சிகள் மூலம் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்த மாற்றுவழி என அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார். 

ஒன்லைன் கல்வி மாணவர்கள் மீது அதிகமான அழுத்தங்களைப் பிரயோகிப்பமட்டுமன்றி கைப்பேசிகளுக்கும் கணணிகளுக்கும் அவர்கள் அடிமையாகும் நிலையை அதிகரித்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment