Friday, November 13, 2020

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவலை வெளிப்படுத்தும் வரைபடம்!

 இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக அபாயத்திற்குள்ளான பகுதிகளை அடையாளப்படுத்தி புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகளின் பிரதேசங்கள்  அறிக்கையிடப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டே இந்த வரைபடத்தை தொற்றுநோயியல் பிரிவு தயாரித்துள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமை முடிவிற்கு வரும் வகையில் கடந்த 14 நாட்களுக்குள்ளாக இனங்காணப்பட்ட தொற்றாளர்களையே இந்த வரைபடம் தயாரிப்பின் போது கருத்தில்கொள்ளப்பட்டுள்ளது. 
இதேவேளை இன்று (13) இதுவரை 468 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment