Saturday, November 7, 2020

ஜோ பைடனின் வெற்றியை எப்படி உறுதிசெய்தது CNN?

 




வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்பட்டுவந்த மாநிலங்களில் ஒன்றான  பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை CNN சிஎன்என் செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது. 


.                                                                        நன்றி பிபிசி 


 பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் இருப்பதாக சிஎன்என் கணித்துள்ளது. 



நவம்பர் மாதம் 3ம் திகதி தேர்தல் நடைபெற்றால் வழமையாக நவம்பர் மாதம் 4ம் திகதியே ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும் . ஆனாலும் இம்முறை தேர்தல் மிகவும் போட்டிமிக்கதாக அமைந்ததால் முடிவை அறிவிக்க 4 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால் அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் அல்ல.

1987ஆம் ஆண்டில் ஒரு முறையும்,2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகும்  போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது.


       'எல்லோருக்குமான அதிபராக இருப்பேன்' - ஜோ பைடன்



அமெரிக்க ஜனாதிபதியாக  தன்னை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்இ நமக்கு முன்னால் உள்ள பணிகள் கடினமாக இருக்கும். ஆனால் இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்: நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் வாக்களித்திருக்காவிட்டாலும் நான் எல்லா அமெரிக்கர்களுக்குமான ஒரு ஜனாதிபதியாக இருப்பேன் . நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.


---------------------------------

தேர்தலில் நானே வென்றேன் - ட்விட்டர் பதிவு மூலம் உரிமை கோரும் டிரம்ப்



பென்சில்வேனியாவில் வெற்றியீட்டியதன் மூலம் ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதி என  பிரகடனப்படுத்த சுமார் ஒருமணிநேரம் முன்பாக   அமெரிக்க தேர்தலில் நானே அதிக அளவில் வென்றேன் என்ற ஒற்றை வரியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் டொனால்ட் டிரம்ப். முன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப். பிறகு அந்த பதிவை நீக்கி விட்டு, மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், டிரம்ப் தரப்பு நடத்தவிருக்கும் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

------------------------------------------------------------------

அமெரிக்காவில் 2021ஆம் ஆண்டில்  ஜனாதிபதியாகும்  தகுதி பெற்றுள்ள ஜோ பைடனின் அரசில் உப ஜனாதிபதியாகும் தகுதியைப் பெற்றிருக்கிறார் கமலா ஹாரிஸ்.



இதன் மூலம் அமெரிக்க உப ஜனாதிபதி பதவிக்கு தேர்வான முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாகிறார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.


ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் போது  உப ஜனாதிபதியாக  கமலா ஹரிஸ் பொறுப்பேற்பார் .



 ஜோ பைடன், தனது உப ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக இருக்கும் கமலா ஹரிஸை இவ்வாண்டு ஒகஸ்ற் மாதம் 11ம் திகதி பெயரிட்டிருந்தார் .  ஜோ பைடன். கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் சட்டமா அதிபராக 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை விளங்கிய கமலா ஹரிஸ் சிறந்த சட்டப்புலமை கொண்டவர் .

2017ம் ஆண்டில் கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்பதவிக்கு தெரிவான  முதலாவது கறுப்பின பெண் என்ற பெருமையைத்தனதாக்கியிருந்தார்.  

அமெரிக்க ஜனநாயக்கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான போட்டியில் 2019ம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது பெயரையும் பதிவுசெய்து ஆரம்பத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கமலா ஹரிஸ் பின்னர் குறைவான ஆதரவுகாரணமாகவும் விமர்ச்சனங்கள் காரணமாகவும் அதிலிருந்து விலகிருந்தார். 

55 வயதுடைய கமலா ஹரிஸின் தந்தை ஜமெய்க்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதுடன் அவரது தாயார் இந்தியாவைச் சேர்ந்த தமிழர். .1964ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதி பிறந்த கமலா ஹரிஸின் முழுப்பெயர்  கமலா தேவி ஹரிஸ் என்பதாகும். 

மாயா என்ற தங்கையும் கமலாவிற்கு உள்ளார். 

 தந்தையின் பெப்டிஸ்ற் கிறிஸ்தவ மதப்பின்புலத்திலும் தாயின் இந்துமதப்பின்புலத்திலும் தனது இளமைக்காலத்தில் வளர்க்கப்பட்ட கமலா ஹரிஸ் தந்தை டொனால்ட் ஹரிஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்பேர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



கமலாவின் தாயாருடைய பெயர் சியாமளா கோபாலன் . மார்பக புற்றுநோய் பற்றிய விஞ்ஞானியான அவர் 1960ம்ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment