Tuesday, November 17, 2020

ட்ரம்பின் பிடிவாதத்தால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் இறக்கலாம்- ஜோ பைடன் எச்சரிக்கை

 


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து இரண்டுவாரங்கள் கடந்துள்ளநிலையிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  மறுதலித்துவருகின்றமை சுமூகமான ஆட்சிமாற்றத்திற்கு மட்டுமல்ல ருத்ர தாண்டவமாடும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கும் பாரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என்ற விடயத்தை  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்படி இரு கட்சியினரும் சொல்லிய பின்பும் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்ற செயல் எனச் சொல்லி இருக்கிறார்.

டிரம்ப் நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டால் பல மக்கள் இறக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார் ஜோ பைடன்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவும்  சமூக வலைதளத்தில் 'இது விளையாட்டு அல்ல' எனச் சொல்லி இருக்கிறார்.

ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார். இது வெற்றிக்குத் தேவையான 270 இடங்களை விட அதிகம்.

இருப்பினும் டிரம்ப், நேற்று (திங்கட்கிழமை) 'நான் தேர்தலில் வெற்றி பெற்றேன்' என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

03 நவம்பர் 2020 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, டிரம்ப் தரப்பினர், பல்வேறு வழக்குகளைத் தொடுத்து இருக்கிறார்கள்.

General Services Administration (GSA)  என்று அழைக்கப்படும் ஓர் அரசு அமைப்பு, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொள்ளத் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஆனால் டிரம்பால் நியமிக்கப்பட்டவர் தலைமையில் இயங்கும் இந்த அமைப்போ, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதனால், பைடன் தரப்பில் உள்ளவர்களுக்கு அரசின் முக்கியமான விவரங்கள் கிடைக்காமல் போகும். வழக்கமாக, இது போன்ற முக்கிய விவரங்கள், புதிதாக வர இருக்கும் நிர்வாகத்துக்கு வழங்கப்படும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தால் என்ன நடக்கும்?


பைடனுக்கு நெருக்கமானவர்கள, ஆட்சி அதிகாரத்தி கைமாற்ற டிரம்ப் மறுப்பதுஇ பைடனின் அணியை, கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பதற்கான திட்டமிடுதலில் இருந்து விலக்கி வைப்பதாக பொருள்படும் என்கிறார்கள்.

ஜோ பைடன் என்ன சொன்னார்?

'யாருக்காவது இது புரிகிறதா? இது உண்மையிலேயே பல உயிர்களை காப்பாற்றுவது தொடர்பானது இது மிகைப்படுத்தப்பட்டது அல்ல என, திங்கட்கிழமை அன்று பேசினார் பைடன். நாம் ஒத்துழைக்கவில்லை என்றால் பல மக்கள் இறந்து போகலாம்' என்றார்.

'அமெரிக்கா முழுக்க கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது மிகப் பெரிய வேலை. என் தரப்பினர்கள் 20 ஜனவரி (ஜனாதிபதி பதவி ஏற்பு) வரை காத்திருக்க வேண்டும் என்றால், நாங்கள் 1 - 1.5 மாதம் பின் தங்கிவிடுவோம்,' எனச் சொல்லி இருக்கிறார் பைடன்.

நீங்கள்இ மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லி மாகாண அரசுகளின் தலைவர்களை உத்தரவு பிறப்பிக்கச் சொல்வீர்களா என்று கேட்டதற்கு நான் முகக் கவசம் அணிவதை ஊக்குவிக்கச் சொல்வேன் என்றார் பைடன்.


No comments:

Post a Comment