Thursday, November 19, 2020

"வர்த்தகம் என்பது ஒருவழித் தடமல்ல" :இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி !




 இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்   மூலம் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் விதிமுறைகளை இலங்கை மீறிவருவதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி வெளியிட்டுள்ளது

வர்த்தகம் என்பது ஒருவழித் தடமல்ல. தற்போது இலங்கையில் காணப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை மற்றும் ஐரோப்பிய வியாபாரங்களில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, பிராந்தியத்தின் மையமாகத் திகழும் இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளதுடன், ஏற்றுமதிக்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் இறக்குமதியை பாதிப்பதனூடாக ஏற்றுமதியிலும் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உலக வர்த்தக நிறுவனத்தின் ஒழுங்குவிதிமுறைகளுக்கமைவாக நீண்ட கால இறக்குமதித் தடை அமைந்திருக்கவில்லை என்பதை  நினைவூட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரொமேனியா தூதரகங்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 



முழுமையான அறிக்கையின் தமிழாக்கம் இதோ:

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பெருமளவு சவால்கள் உருவெடுக்கும் நிலையில், கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அங்கத்துவ நாடுகளின் தூதரகங்களின் உயரதிகாரிகள் உயர் மட்ட தொடர் சந்திப்புகளை முன்னெடுத்திருந்ததுடன், இதில் இலங்கையின் வெளியுறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பும் அடங்கியிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில், கடந்த 25 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு பரஸ்பர உதவிகளுக்கு மேலதிகமாக, 1 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமான நன்கொடை உதவிகளை வழங்கி, இலங்கையின் நம்பகமான பங்காளராக நாம் திகழ்கின்றமையை நாம் வலியுறுத்தியிருந்தோம்.

எமது அபிவிருத்திக்கான பங்காண்மைக்கு மேலாக, இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார பங்காளராக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்வதை நாம் நினைவூட்டியிருந்தோம். குறிப்பாக மனித உரிமைகள், தொழில், சூழல், காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி ஆகிய அடங்கலான 27 சர்வதேச மாநாடுகளின் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றமையின் பிரகாரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமை (GSP+) வரிச் சலுகை காரணமாக ஐரோப்பிய சந்தையில் போட்டிகரமான, பெருவாரியான வரி மற்றும் கோட்டா முறைமை இல்லாத வாய்ப்பை இலங்கை அனுபவித்த வண்ணமுள்ளது. இந்த பரஸ்பர வியாபார முன்னுரிமைகள் காரணமாகஇ உலகளாவிய ரீதியில் இலங்கையின் இரண்டாவது மாபெரும் ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கின்றது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 1 பில்லியன் யூரோக்கள் (சுமார் 220 பில்லியன் இலங்கை ரூபாய்) வியாபார மீதியை கொண்டிருந்தது.

வர்த்தகம் என்பது ஒருவழித் தடமல்ல. தற்போது இலங்கையில் காணப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை மற்றும் ஐரோப்பிய வியாபாரங்களில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, பிராந்தியத்தின் மையமாகத் திகழும் இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளதுடன், ஏற்றுமதிக்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் இறக்குமதியை பாதிப்பதனூடாக ஏற்றுமதியிலும் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உலக வர்த்தக நிறுவனத்தின் ஒழுங்குவிதிமுறைகளுக்கமைவாக நீண்ட கால இறக்குமதித் தடை அமைந்திருக்கவில்லை என்பதை நாம் நினைவூட்டுகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சம்மேளனத் தீர்மானம் 30/1 இலிருந்து இலங்கை வெளியேறியமை என்பது ஒரு கவனிக்கப்பட வேண்டிய விடயமாக அமைந்துள்ளது. இலங்கையின் பன்முகச் சமூகங்கள் மத்தியில் சமாதான ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் நீதியை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. அரசாங்கத்துக்கு இதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவுள்ளது. இதற்கு சட்ட நீதி மற்றும் துடிப்பான சிவில் சமூகம் போன்றன அத்தியாவசியமானவையாக அமைந்துள்ளன.

எமது பகிரப்பட்ட சர்வதேச அர்ப்பணிப்புகள் மற்றும் கடப்பாடுகளின் பிரகாரம் இலங்கையுடன் ஆழமான ஈடுபாட்டை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.''  என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது


No comments:

Post a Comment