Tuesday, November 17, 2020

கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும் என்ற மேயர் ரோஸியின் யோசனை உணர்த்துவதென்ன?



கொழும்பில் கொரோனா பரவல் தொடர்பாக அதிகாரிகளால் வெளிப்படுத்தப்படும் தரவுகளும் உண்மையான தரவுகளுக்கும் இடையே பாரிய வேறுபாடுகாணப்படுவதாக பல்வேறு தரப்புக்களின் அறிக்கைகள் உணர்வுவெளிப்பாடுகள் உள்ளக்குமிறல்கள்  எடுத்துணர்த்துகின்றன. 

நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, கொழும்பு நகரை நகரை கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். 

கொழும்பிற்கு வெளியே வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு கொழும்பை முடக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இந்த காலப்பகுதியில் கொழும்பிற்குள் நுழைவதற்கோ கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கோ எவரும் அனுமதிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தொடர்ந்தும் அபாயகரமான பகுதியாக காணப்படும் நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  வெளியிட்டுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன. 

கடந்த 14 நாட்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக  அவ்வமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அலுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



கொவிட் 19 பரவலானது கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாரிய அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 704 பேரில் 701 பேர் மினுவாங்கொடை  மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய அந்த கொத்தணிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுறுதியான ஏனைய 3 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியிருந்தவர்களாவர். நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 704 பேரில் 541 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 39 பேரும், காலி மாவட்டத்தில் 8 பேரும், நேற்று கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 54 காவல்துறை அதிகாரிகளுக்கும், போகம்பறை சிறைச்சாலையின் 8 கைதிகளுக்கும் நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லை பகுதியிலும் மேல் மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


அந்த தடுப்பு பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை கொத்தணி தற்போது பூரண கட்டுப்பாட்டில்

மினுவாங்கொடை கொத்தணி தற்போது முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுள்ளவர்களாக கண்டறியப்பட்ட 3106 பேரில் தற்போது 136 நோயாளிகளே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக அவர் தெரிவித்தார்.


கொவிட்-19 இரண்டாவது அலை கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி மினுவாங்கொடையில் ஆரம்பித்த போது அதை 3106 நோயாளிகளாக மட்டுப்படுத்த முடிந்தது என்றும் மினுவாங்கொடை கொத்தணி தற்போது முற்றுமுழுதாக பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


கம்பஹாவில் யாராவது ஒரு வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி இப்போது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் பேலியகொட மீன்சந்தைக் கொத்தணியுடனேயே தொடர்புபட்டிருப்பார் என்றார். இதேவேளை நேற்று முன்தினம் (15) மொத்தமாக 704 கொவிட்- 19 நோயாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர்களில் 541பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து அறியப்பட்டதாகவும் அதிகமான நோயாளர்கள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்ளேயே இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


அடக்கம் செய்ய இடமளிப்பதை விரும்புகிறார் காணி அமைச்சர்


கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின்உடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதை தான் விரும்புவதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.


அனைத்து மக்களுக்கும் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேவேளை நீதியமைச்சர் அலி சப்ரி அரசாங்கத்திடம்இது தொடர்பில்விடுத்துள்ள கோரிக்கை குறித்துஎதிர்ப்புகள்முன்வைக்கப்பட்டுவருகின்றன.


மேலும்இ கொரோனா வைரஸ் காரணமாக எவராவது இறக்கும் சந்தர்ப்பத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை விடுத்தால், அதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே முடிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment