Wednesday, November 18, 2020

கொழும்பை மீண்டும் முடக்குவது தொடர்பாக இன்னமும் தீர்மானமில்லை!

  


கொழும்பு நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில்  கொழும்பை மீண்டும் முடக்குவது தொடர்பாக இதுவரை  அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என கொவிட்-19 தடுப்பிற்கு பொறுப்பான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்பாக தினந்தோறும்  மீள்பார்வைக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

செவ்வாய் மாலை ஆங்கில இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது கொழும்பு மாவட்டத்தை முழுமையாக முடக்குவதற்கு தேவை ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

தற்போது இனங்காணப்படும் புதிய தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்தே கண்டறியப்பட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில்  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்  கொழும்பை மூன்று வாரங்களுக்கு முடக்கிவைக்க வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பாக பதிலளிக்கும் போதே இராணுவத்தளபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (17) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 61 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 மரணங்களுடன், இதுவரை 66 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (16) கொவிட்-19 தொடர்பான 3 மரணங்களும், நேற்று முன்தினம் (15) 05 மரணங்களும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


62ஆவது மரணம்

கொழும்பு 10 (மருதானை/மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு புனானை சிகிச்சை நிலையம் அதனைத் தொடர்ந்து வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தத்துடன் கொவிட்-19 தொற்று எனஇ அறிவிக்கப்பட்டுள்ளது.

63ஆவது மரணம்

இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான பெண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவு நோய் பிரச்சினைகள் மற்றும் அதிக இரத்த அழுத்தத்துடன், கொவிட்-19  தொற்று எனஇ அறிவிக்கப்பட்டுள்ளது.


64ஆவது மரணம்

கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த, 71 வயதான பெண் ஒருவர்இ வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணமாக, அதிக இரத்த அழுத்தத்துடன், நீரிழிவு மற்றும் கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

65ஆவது மரணம்

கொழும்பு 02 (கொம்பனித் தெரு) பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்றுடனான நியூமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

66ஆவது மரணம்

கொழும்பு 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான ஆண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணமாக, நீரிழிவு நோய் காரணமான பிரச்சினைகள் மற்றும் கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

===============================================================

இலங்கையில் கொரோனா தொடர்பான மரணங்கள்
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.
12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.
13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
16ஆவது மரணம், ஒக்டோபர் 25ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 02 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
17ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 41 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
18ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 19 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
19ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொம்பனித்தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
20ஆவது மரணம், ஒக்டோபர் 30ஆம் திகதி, 54 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
21ஆவது மரணம், ஒக்டோபர் 31ஆம் திகதி, 40 வயதான, வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, மஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
22ஆவது மரணம், நவம்பர் 01ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
23ஆவது மரணம், நவம்பர் 02ஆம் திகதி, 61 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15, மோதறை உயனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
24ஆவது மரணம், நவம்பர் 03ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
25ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 46 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணித்த, கொழும்பு 02 (கொம்பனித் தெரு) ஐச் சேர்ந்த, ஆண் ஒருவர்.
26ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 68 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
27ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12 (வாழைத்தோட்டம் பகுதி) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
28ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
29ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (மட்டக்குளி பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
30ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 23 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (மோதறை பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
31ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 42 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
32ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 69 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
33ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (வெல்லம்பிட்டி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
34ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 88 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (கணேமுல்ல) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
35ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 78 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த ஆண் ஒருவர்.
36ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 84 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
37ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 55-60 வயதுக்குட்பட்ட, யார் என அடையாளம் காணப்படாத, ஆண் ஒருவர்.
38ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 51 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, ராஜகிரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
39ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
40ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 63 வயதான, கம்பஹா வைத்தியசாலையில் மரணமடைந்த, உடுகம்பொலவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
41ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, ராகமையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
42ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 80 வயதான, பொலிஸ் வைத்தியசாலையில் மரணமடைந்த, பாணந்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
43ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 40 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, புறக்கோட்டையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
44ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 45 வயதான, அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, களனியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
45ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, மாளிகாவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
46ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 63 வயதான, மஹரகம வைத்தியசாலையில் மரணமடைந்த, இம்புல்கொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
47ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 54 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
48ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 45 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, மீகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
49ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
50ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 68 வயதான, சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
51ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 69 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
52ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
53ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 64 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
54ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
55ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 39 வயதான, ஹோமாகம வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
56ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
57ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
58ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
59ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, மொரட்டுவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
60ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 70 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
61ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 75 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
62ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 65 வயதான, புனானை வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
63ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
64ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, கிருலப்பனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
65ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 81 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
66ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 82 வயதான, வீட்டில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 18,075 பேரில் தற்போது 5,799 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 12,210 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 61 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 516 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 18,075
குணமடைவு - 12,210
நேற்று அடையாளம் - 387
இன்று அடையாளம் - 401
இன்று குணமடைவு - 404
சிகிச்சையில் - 5,799
மரணம் - 66

மரணமடைந்தவர்கள் - 66
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)


No comments:

Post a Comment